நீயா? நானா? பார்த்திடலாம்... சாக்கடை கால்வாய்க்குள் குதித்து மோதி கொண்ட பெண்கள் - வைரல் வீடியோ
கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில், சாக்கடை வடிகாலுக்குள்ளே குதித்து பெண்கள் சண்டையிட்டு கொண்டது பார்ப்பவர்களை அச்சம் கொள்ள வைத்தது.
சகோதரிகள் இருவருக்கிடையே சண்டை வருவது இயல்பான ஒன்று தான். ஒருவரை ஒருவர் முடியை பிடித்து கொண்டு சண்டையிட்டு கொள்வதை அனைவரும் சாலைகளில் ஏன் வீட்டில் கூட பார்த்து இருக்கலாம்.
View this post on Instagram
அந்த வகையில், ராஜஸ்தானில் சொத்து பிரச்சினை காரணமாக சகோதரிகள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய பிரதிநிதிகள் இல்லாத ஆளுங்கட்சியாக மாறும் பாஜக: ரிப்போர்ட் சொல்வது என்ன?
கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில், சாக்கடை வடிகாலுக்கு உள்ளே குதித்து பெண்கள் சண்டையிட்டு கொண்டது பார்ப்பவர்களை அச்சம் கொள்ள வைத்தது. சாக்கடை வடிகாலுக்கு உள்ளே பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அப்போது, திடீர் என ஒரு பெண் வடிகாலுக்குள்ளே குதித்து வாக்குவாத்தில் ஈடுபட்ட பெண்களில் ஒருவரை தாக்குகிறார். யாரும் எதிர்பாராத விதமாக, ஒரு ஆண் குதித்து அதில் ஒரு பெண்ணை தாக்குகிறார்.
இதையும் படிக்க: IND vs SA, 1st T20 : எனக்கு இது முன்னவே தெரியும்; அதுதான் ட்விட்ஸ்ட்! - இந்தியாவுடனான வெற்றி குறித்து வான்டர் டுசன்
சொத்து பிரச்சினை காரணமாக அவர்கள் சண்டையிட்டு கொள்வதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பயனாளிகள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்