(Source: ECI/ABP News/ABP Majha)
Vande Bharat : எருமை மாடுகள் மீது மோதிய வந்தே பாரத் ரயில்..! ரயிலின் முன்பக்கம் கடும் சேதம்..!
பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் எருமை மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது.
மத்திய அரசால் ரயில் சேவையில் சொகுசு மற்றும் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில் இருந்து மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயங்கும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காந்திநகருக்கு இன்று காலை பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கி வைத்த புதிய வந்தே பாரத் ரயில் வந்து கொண்டிருந்தது. சரியாக இன்று காலை 11.15 மணிக்கு வத்வா ரயில்நிலையத்தில் இருந்து மணிநகர் ரயில் நிலையத்தின் அருகே ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தை 3 – 4 எருமைகள் கடந்து கொண்டிருந்தது. அதிவேகமாக வந்து கொண்டிருந்த ரயில், தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியது. இதில், வந்தே பாரத் ரயிலின் எஞ்சின் மீது பொருத்தப்பட்டிருந்த முகப்பு பகுதி கடுமையாக சேதம் அடைந்தது.
Vande Bharat Express running b/w Mumbai Central to Gurajat's Gandhinagar met with an accident after a herd of buffaloes came on the railway line at around 11.15am b/w Vatva station to Maninagar. The accident damaged the front part of the engine: Western Railway Sr PRO, JK Jayant pic.twitter.com/OLOMgEv10G
— ANI (@ANI) October 6, 2022
இதனால், ரயில் பாதி வழியிலே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, எஞ்சின் பகுதியை ரயில் எஞ்சின் டிரைவர்கள் சோதித்தனர். அப்போது, முகப்பு பகுதி மட்டுமே சேதமடைந்திருந்தது தெரியவந்தது. எஞ்சின் பகுதியில் எந்தவித சேதமும் அடையவில்லை. இதையடுத்து, சேதமடைந்த பகுதி 8 நிமிடங்களில் நீக்கப்பட்டது. பின்னர், வந்தே பாரத் ரயில் வழக்கம்போல இயங்கியது.
எருமை மாடுகள் மீது மோதியதால் 8 நிமிடங்கள் ரயில் இயங்குவதற்கு தாமதம் ஆனாலும், வழக்கமாக காந்திநகரை வந்தடையும் நேரத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தடைந்தது.
இந்த சம்பவத்தில் வந்தே பாரத் ரயில் மீது மோதிய எருமை மாடுகளின் நிலை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும், வந்தே பாரத் ரயிலின் முகப்பு பகுதியில் எருமை மாடுகளின் ரத்தம் சிதறியிருப்பது போன்று புகைப்படத்தில் உள்ளது. வந்தே பாரத் ரயில் மிகவும் சொகுசு வசதிகள், கழிவறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயிலில் கட்டணமும் மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Bus Accident: அய்யோ.. பதைபதைக்க வைத்த விபத்து.. 42 பள்ளி மாணவர்களுடன் சென்ற பேருந்து.. குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு..
மேலும் படிக்க : Mal River Flood: துர்க்கை சிலையை கரைக்க சென்ற பக்தர்கள்.. திடீரென பாய்ந்த வெள்ளம்.. 100-க்கும் மேற்பட்டோர் மாயம்.. அச்சுறுத்தும் பலி எண்ணிக்கை..