சிகரெட் பிடிச்சா சரியாயிடும்! 5 வயது குழந்தைக்கு மருத்துவர் அளித்த சிகிச்சை.. அடப்பாவிகளா
மருத்துவர் ஒருவர், ஐந்து வயது சிறுவனை வாயில் சிகரெட்டை வைக்கச் சொல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர், மருத்துவர் சிகரெட்டை பற்றவைத்து, சிறுவனை பலமுறை சிகரெட்டை இழுக்கச் சொல்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிரால் நடுங்கிய 5 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, சிகரெட் பிடிக்க வைத்துள்ளார் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர். இதையடுத்து, மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை பணியிட மாற்றம் செய்ததோடு, இதுகுறித்து விசாரணை செய்ய தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சிறுவனுக்கு மருத்துவர் அளித்த சிகிச்சையால் சர்ச்சை:
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜலான் நகரில் 5 வயது சிறுவன் குளிரால் நடுங்கியுள்ளார். இதையடுத்து, குத்தாவுண்ட் பகுதியில் உள்ள மத்திய சுகாதார மையத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, சுரேஷ் சந்திரா என்ற மருத்துவர், சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, சிகரெட் பிடிக்க வைத்துள்ளார்.
ஐந்து வயது சிறுவனை டாக்டர் சந்திரா வாயில் சிகரெட்டை வைக்கச் சொல்வது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. பின்னர், மருத்துவர் சிகரெட்டை பற்றவைத்து, சிறுவனை பலமுறை சிகரெட்டை இழுக்கச் சொல்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கி அடிக்கப்பட்ட மருத்துவர்:
இந்த வீடியோவை பார்த்த பலர், மருத்துவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி நரேந்திர தேவ் சர்மா கூறுகையில், "குத்தாவுண்டில் உள்ள மத்திய சுகாதார மையத்தில் பணியமர்த்தப்பட்ட டாக்டர் சுரேஷ் சந்திரா, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
#जालौन में इस डॉक्टर को देखिए, मासूम बच्चें का इलाज कर रहा है।
— Kamini Jha (@KaminiJha10) April 16, 2025
जुकाम खत्म करने के लिए सिगरेट की दवाई पिला रहा है !
सोशल मीडिया में वायरल वीडियो सामुदायिक स्वास्थ्य केन्द्र कुठौंद में तैनात डॉक्टर सुरेश चंद्र की बताई जा रही है !#viralvideo #UttarPradesh #शर्मनाक pic.twitter.com/bUMW0u9In8
கூடுதல் தலைமை மருத்துவ அதிகாரியும் மருத்துவருமான எஸ்.டி. சவுத்ரி தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு, விரிவான அறிக்கை மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இதுபோன்ற சம்பவங்களை மாவட்டத்தில் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க நாங்கள் கடுமையான வழிமுறைகளைப் பிறப்பித்துள்ளோம்" என்றார்.
இதையும் படிக்க: TN Infrastructure: தமிழ்நாடு - 50 திட்டங்கள் , ரூ.45 ஆயிரம் கோடி - ஒரே ஊரில் ரூ. 20,000 கோடி எங்கு? எதற்கு தெரியுமா?





















