உள்ளூரிலேயே சொகுசு கப்பல் சுற்றுலா! வேற stateக்கு போக கூட தேவையில்ல.. இனி ஜாலிதான்!
தமிழ்நாட்டில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஈடுபட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக, தமிழக சுற்றுலா துறையுடன் இணைந்து செயல்பட உள்ளது.
எந்த ஒரு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு முன்பும், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலமைப்பை முறையாக பாதுகாப்பதற்காக மத்திய அரசு சில ஆய்வுகளை மேற்கொள்ளும்.
உள்ளூரிலேயே சொகுசு கப்பல் சுற்றுலா:
அதாவது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்காக இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறது. தேவைப்படும் இடங்களில் ஒப்புதல்கள் பெறப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையுடன் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தில் சொகுசு கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஈடுபட இந்திய தேசிய நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் மேற்கொள்வதற்கு முன்பு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் பொருளாதாரப் பயன்களை உள்ளடக்கி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, விரிவான திட்ட அறிக்கையின் பரிந்துரைகள் இயன்ற அளவிற்கு பின்பற்றப்படுகிறது.
தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்:
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முறை, மற்ற போக்குவரத்து முறைகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த கட்டணத்துடன் கூடிய போக்குவரத்து முறையாகும். இது சரக்கு போக்குவரத்தின் செலவைக் குறைக்கும்.
தாபி ஆறு (தேசிய நீர்வழி-100), அம்பா ஆறு (தேசிய நீர்வழி-10), ஜெய்காட் க்ரீக்-சாஸ்திரி ஆறு (தேசிய நீர்வழி-91) ஆகியவற்றின் அருகே அமைந்துள்ள ஆற்றங்கரைகளில் ஏற்பட்டுள்ள பெரிய அளவிலான தொழில்மயமாக்கல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இங்கு குறிப்பிட்டுள்ள உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளில் சுமார் 98.67 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாள்கிறது. மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!