"பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்" ஐடியா கொடுத்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
உற்பத்தித் திறனை அதிகரிக்க பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை தீவிரமாகப் பயன்படுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
![Union Minister L Murugan urges the Ministry to actively incorporate AI tools in the workplace to boost productivity](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/25/43d15bfc49c84ab5f140d7cfd8d664711729855552822729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேசிய கற்றல் வாரம் 2024இன் பரிசளிப்பு விழா, ஐகாட் (iGOT) ஆய்வகம், கற்றல் மையத்தின் தொடக்க விழா ஆகியவற்றின் தலைமை விருந்தினராக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
தேசிய கற்றல் வாரம் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட ஒரு முக்கிய திட்டம் ஆகும். உலகளாவிய கண்ணோட்டத்துடன் இந்திய விழுமியங்களில் ஆழமாக வேரூன்றிய பணியாளர்களின் நடைமுறையை வலுவாக உருவாக்கும் நோக்கில் அனைத்து நிலைகளிலும் உள்ள அரசு ஊழியர்களின் திறன்களை வலுப்படுத்துவதே இந்த வாரத்தின் நோக்கமாகும்.
"பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்"
இந்த நிகழ்ச்சியில், பேசிய தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல்.முருகன், 30 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதில் இதன் முக்கியத்துவத்தை விளக்கினார். 2 கோடியே 20 லட்சம் மாநில அளவிலான அரசு ஊழியர்கள் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்பு பணியாளர்களுக்கு தொடர்ச்சியான கற்றலுக்கான அணுகலை உறுதி செய்வதிலும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
இந்த திட்டம் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்களுக்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பதையும் அவர் விளக்கினார். முன்னேற விரும்பும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்ல செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உற்பத்தித் திறனை அதிகரிக்க பணியிடங்களில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை தீவிரமாகப் பயன்படுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் என்ன பேசினார்?
மக்களை மையமாகக் கொண்ட ஆளுகையை மேம்படுத்துவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்திய இணையமைச்சர் எல் முருகன், மேம்பட்ட சேவை வழங்கலுக்கு திறமையான குறைதீர்ப்பு நடைமுறை இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், தகவல் ஒலிபரப்புத் துறைச் செயலாளர் சஞ்சய் ஜாஜு, சிறப்பு செயலாளர் நீரஜா சேகர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: ABP Southern Rising Summit 2024: "தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)