மேலும் அறிய

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சிறுதானியங்களை ஊக்கப்படுத்த அள்ளி கொடுக்கும் மத்திய அரசு!

800 கோடி ரூபாய் செலவில் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் மூலம் சிறுதானியங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிறுதானியங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 800 கோடி ரூபாய் செலவில் உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய உணவு பதப்படுத்தும் தொழில் துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, "உணவுப் பொருட்களில் சிறுதானியங்களின் பயன்பாட்டையும்  மதிப்புக் கூட்டலையும் ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு கடந்த 2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் சிறுதானிய அடிப்படையிலான உணவுப் பொருட்களுக்கு உற்பத்தியுடன் சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை (பிஎல்ஐ) ரூ.800 கோடி செலவில் அறிமுகப்படுத்தி உள்ளது.

சிறுதானியங்களை ஊக்கப்படுத்தும் மத்திய அரசு:

இந்தத் திட்டம் அடிப்படை முதலீட்டுத் தேவையை நீக்குகிறது. இது அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிப்பதாக உள்ளது. ஊக்கத்தொகைகளுக்கு தகுதி பெற, திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அடிப்படை ஆண்டில் குறைந்தபட்சம் 10% ஆண்டு விற்பனை வளர்ச்சியை அடைய வேண்டும்.

சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளுக்கான பிஎல்ஐ திட்டத்தில் முப்பது பயனாளிகள் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டனர். ஒரு பயனாளி விலகிக் கொண்டதற்குப் பிறகு, இப்போது 29 பயனாளிகள் உள்ளனர். திட்ட வழிகாட்டுதல்களின்படி, சிறுதானியம் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதில் உள்நாட்டில் பெறப்பட்ட விவசாயப் பொருட்கள் (சேர்க்கைகள், சுவைகள் மற்றும் எண்ணெய்கள் தவிர்த்து) மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த தேவை உள்ளூர் உற்பத்தி மற்றும் விவசாய விளைபொருட்களின் கொள்முதலை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. இத்திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள். முதல் செயல்திறன் ஆண்டுக்கான (2022-23-ம் நிதியாண்டு) கோரிக்கைகள் நிதியாண்டு 2023-24-ல் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்:

19 விண்ணப்பதாரர்கள் ஊக்கத்தொகை கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இதுவரை ரூ. 3.917 கோடி வழங்கப்பட்டுள்ளது. சிறுதானியம் சார்ந்த பொருட்களுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தை அமல்படுத்துவதை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கைகளில் பயனர் நட்பு போர்ட்டலை நிறுவுதல் மற்றும் உடனடி சிக்கல் தீர்வுக்காக அர்ப்பணிப்பு குழுக்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். திட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாகப் புரிந்து கொள்ள ஏதுவாக திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த விளக்கங்கள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன.

மேலும், வழக்கமான கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் திட்டத்தை சீராக செயல்படுத்த அர்ப்பணிப்புள்ள குழுக்கள் மூலம் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, பயனுள்ள தகவல் தொடர்பு மற்றும் முன்னேற்ற கண்காணிப்பை உறுதி செய்வதற்காக விண்ணப்பதாரர்களுடன் வாராந்திர கூட்டங்கள் நடத்தப்படுகின்றன" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Zelensky Apology: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
Elon Musk X: எக்ஸ் தளத்தின் மீது சைபர் அட்டாக்..! எனக்கு ஒருத்தர் மேல சந்தேகம் - எலான் மஸ்க் போட்ட குண்டு
America Recession Fear: ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
ஐய்யோ போச்சே.!! ட்ரம்ப் செய்த காரியத்தால் நெருக்கடியில் அமெரிக்கா...
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Weather: குடை இல்லாமல் போகாதீங்க.. வெளுத்து வாங்கப் போகும் மழை.. வானிலை அப்டேட் என்ன ?
Embed widget