மேலும் அறிய

ஆஹா! பிரியாணி விலை குறைய வாய்ப்பிருக்கா? பாசுமதி அரிசியின் அடிப்படை விலையை நீக்கும் மத்திய அரசு

உள்நாட்டில் போதுமான அளவு அரிசி கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை முற்றிலுமாக நீக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

பாசுமதி அரிசியின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் அதன் அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பாசுமதி அரிசியின் விலை குறைகிறதா?

இந்தியர்களின் முதன்மையான உணவு வகைகளில் ஒன்றாக இருப்பது அரிசி சாப்பாடு. குறிப்பாக, தென் இந்தியர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக அரிசி சாப்பாடு உள்ளது. வட இந்தியாவை பொறுத்தவரையில்,  பாசுமதி அரிசி பயன்பாடே அதிகம். 

கடந்த சில ஆண்டுகளாக தென் இந்தியாவிலும் பாசுமதி அரிசி பயன்படுத்துவது அதிகரித்து வந்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற அரிசி ரகத்தில் பாசுமதி அரசி வகை முதன்மையாக உள்ளது. இந்த நிலையில், இதன் ஏற்றுமதியை அதிகரிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் உள்நாட்டில் போதுமான அளவு அரிசி கிடைப்பதைக் கருத்தில் கொண்டு, பாசுமதி அரிசி ஏற்றுமதிக்கான அடிப்படை விலையை முற்றிலுமாக நீக்க மத்திய அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் முடிவுக்கு காரணம் என்ன?

வேளாண் மற்றும் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பாசுமதி அரிசிக்கு எதார்த்த நிலைக்கு மாறாக விலை நிர்ணயம் செய்வதைத் தடுக்கவும், ஏற்றுமதி நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஏற்றுமதி ஒப்பந்தங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான ஏற்றுமதி தடையைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதியின் போது பாஸ்மதி அல்லாத அரிசியை பாஸ்மதி அரிசி என தவறாக வகைப்படுத்துவதைத் தடுக்க, 2023 ஆகஸ்ட் மாதம்  ஒரு மெட்ரிக் டன்னுக்கு 1,200 டாலர் என்ற அடிப்படை விலை அறிமுகப்படுத்தப்பட்டது. வர்த்தக அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களின் பிரதிநிதித்துவங்களைத் தொடர்ந்து, அரசு, 2023 அக்டோபரில்  அடிப்படை விலையை மெட்ரிக் டன்னுக்கு 950 டாலராகக் குறைத்தது.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் உணவு பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், பாசுமதி அரிசியின் விலை குறைவு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறிப்பாக, பாசுமதி அரிசியால் செய்யப்படும் பிரியாணி விலை குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க: இந்த மாசத்தோட கடைசி முகூர்த்தம்! தமிழ்நாட்டில் காய்கறிகள், பூக்கள் விற்பனை படுஜோர் - வியாபாரிகள் ஹாப்பி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget