Watch Video: உடம்புல ஒரே ஒரு Towel தான்! ஓடும் மெட்ரோவில் பெண்கள் செஞ்ச காரியத்தை பாருங்க!
ஓடும் மெட்ரோவில் உடலில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு 4 பெண்கள் பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதள வளர்ச்சிக்கு பிறகு பலரும் தங்களின் திறமையை பலரும் வெளிக்காட்டி வருகிறார்கள். அதேசமயம் சிலர் தங்களை பலரும் திரும்பி பார்க்க வேண்டும் என்று வினோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் கவர்ச்சிகரமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மெட்ரோவில் சில பெண்கள் வெறும் துண்டை மட்டும் பயணித்த வீடியோ இணையத்தில் அதிர வைத்து வருகிறது.
வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பயணம்:
ரஷ்யாவைச் சேர்ந்தவர் கேட் சும்ஸ்கயா. இவர் அந்த நாட்டில் உள்ள மாடலிங் ஆவார். விளம்பரங்களில் நடித்து வரும் இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 2.5 மில்லியன் நபர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது தோழிகள் 3 பேருடன் சேர்ந்து அந்த நாட்டில் உள்ள மெட்ரோ ஒன்றில் வெறும் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு பயணித்துள்ளார்.
View this post on Instagram
இளம் பெண்களான அவர்கள் 4 பேரும் தங்களது உடலில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு தலையில் வெறும் துண்டை கட்டிக்கொண்டு மெட்ரோவில் பயணித்தனர். திடீரென துண்டுடன் மெட்ரோவின் உள்ளே வந்த பெண்களை கண்ட மெட்ரோ பயணிகள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இவர்கள் 4 பேரும் மெட்ரோவில் பயணித்தவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
வைரலாகும் வீடியோ:
இவர்களையும் மெட்ரோவில் பயணித்த பயணிகள் பலர் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 2.5 லட்சம் மக்கள் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் சிலர் இந்த வீடியோவை பார்த்து பொதுவெளியில் இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்றும் விமர்சித்து வருகின்றனர்.