மேலும் அறிய

10 யானைகள் மர்ம மரணம்.. விசாரணையில் இறங்கிய மத்திய அரசு.. நடந்தது என்ன?

மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தாவ்கர் புலிகள் காப்பகத்தில் 10 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

மத்திய பிரதேசத்தின் பந்தாவ்கர் புலிகள் காப்பகத்தில் பத்து யானைகள் இறந்தது குறித்து விசாரிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 5 பேர் கொண்ட மாநில அளவிலான குழுவையும் மத்தியப் பிரதேச அரசு அமைத்துள்ளது. கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் இறந்து கிடந்த யானைகள்:

இந்த குழுவில் சிவில் சமூக பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். வனப்பகுதி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேச முதன்மை தலைமை வன பாதுகாவலர் பாந்தவ்கரில் முகாமிட்டு விசாரணை மற்றும் இது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார். மறுபுறம், கூடுதல் வன தலைமை இயக்குநர் (புலிகள் மற்றும் யானைகள் திட்டம்), மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அந்த இடங்களைப் பார்வையிட்டு, பல்வேறு தொடர்புடைய பிரச்னைகள் மற்றும் யானைகளின் இறப்புக்கான காரணம் குறித்து மாநில அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகிர்ந்த முதற்கட்ட தகவல்களின்படி, யானைகள் விஷம் குடித்ததால் இறந்திருக்கலாம் என தெரிகிறது. விரிவான பிரேத பரிசோதனை அறிக்கைகள், திசுநோயியல், நச்சுயியல் அறிக்கைகளின் முடிவுகள் மற்றும் பிற உறுதிப்படுத்தும் சான்றுகள் மூலம் மட்டுமே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும்.

காரணம் என்ன?

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் இருக்க மாநில அதிகாரிகளால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், பந்தாவ்கர் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிற யானைக் கூட்டங்கள் தொடர்பான கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 29ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள பந்தாவ்கர் புலிகள் காப்பகத்தின் படௌர், கியாதுலி மலைத்தொடரின் சல்கானியா பீட்ஸில் நான்கு யானைகள் இறந்து கிடந்ததை பந்தாவ்கர் புலிகள் காப்பகத்தின் ரோந்து ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் வேட்டையில், மேலும் 6 யானைகள் உடல்நிலை சரியில்லாமல் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டன. கள ஊழியர்கள் மற்றும் உள்ளூர் கால்நடை அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட யானைகளுக்கு சிகிச்சையைத் தொடங்கினர்.

ஆனால், நோய்வாய்ப்பட்ட 4 யானைகள் கடந்த 30ஆம் தேதி உயிரிழந்தன. மேலும், தொடர் மருந்துகள் மற்றும் சிகிச்சைக்குப் பிறகும், மீதமுள்ள இரண்டு நோய்வாய்ப்பட்ட, மயக்கமடைந்த யானைகள் கடந்த 31ஆம் தேதி உயிரிழந்தன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
Embed widget