Morning Headlines: 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. 12 மாநிலங்களில் பிரதமர் சூறாவளி பயணம்: முக்கியச் செய்திகள்
Morning Headlines March 4: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இன்று தொடங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு.. தேர்வெழுதும் 8 லட்சம் மாணவர்கள்..
தமிழ்நாட்டில் மார்ச் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3,302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மொழிப்பாடத்துடன் தொடங்குகிறது. இன்று தொடங்கும் தேர்வு 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை 3,89,736 மாணவர்கள், 4,30,471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். மேலும் படிக்க..
- பாஜகவால் மோடியா? மோடியால் பாஜகவா? 10 நாட்களில் 12 மாநிலங்களில் 29 நிகழ்ச்சிகள் - சூறாவளி பரப்புரை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி அடுத்த 10 நாட்களில், 29 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். ர்தலுக்கான தேதி, இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை முழு வேகத்தில் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) தொடங்கி, அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 29 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அரசு தரப்பிலான தகவல்களின்படி, தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு-காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த 10 நாட்களில் மோடி பயணம் மேற்கொள்கிறார். மேலும் படிக்க..
- மயிலாடுதுறையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..
மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார். மேலும் படிக்க..
- தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பிரச்னை - அதிமுக சார்பில் இன்று போராட்டம்
போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பதை கண்டித்து தமிழ்நாட்டில் இன்று, வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பான அறிக்கையில், “திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் படிக்க..