2024ல் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? - எந்த மாதம் டாப் தெரியுமா? மொத்த லிஸ்ட்!
01.11.2024 முதல் 30.11.2024 வரை மொத்தம் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் மெட்ரோவில் 83.61 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னை மெட்ரோ நிர்வாகம் எப்போதும் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க முயற்சிக்கிறது. 01.11.2024 முதல் 30.11.2024 வரை மொத்தம் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 84,63,384 பயணிகள், பிப்ரவரியில் மொத்தம் 86,15,008 பயணிகள், மார்ச் மாதம் மொத்தம் 86,82,457 பயணிகள், ஏப்ரல் மாதம் மொத்தம் 80,87,712 பயணிகள், மே மாதம் மொத்தம் 84,21,072 பயணிகள், ஜூன் மாதம் மொத்தம் 84,33,837 பயணிகள், ஜூலை மாதம் மொத்தம் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதம் மொத்தம் 92,77,697 பயணிகளும், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
83.61 lakh passengers recorded to have travelled in November, 2024
— Chennai Metro Rail (@cmrlofficial) December 2, 2024
CMRL has always endeavored to provide the people of Chennai with a safe, efficient, and reliable travel partner. A total of 83,61,492 passengers have travelled in the Metro Trains from 01.11.2024 to 30.11.2024.… pic.twitter.com/1t63GzAJQX
ஜனவரி - 84,63,384
ப்ப்ரவரி - 86,15,008
மார்ச் - 86,82,457
ஏப்ரல் - 80,87,712
மே - 84,21,072
ஜூன் - 84,33,837
ஜூலை - 95,35,019
ஆகஸ்ட் - 95,43,625
செப்டம்பர் - 92,77,697
அக்டோபர் - 90,83,996
நவம்பர் - 83,61,492
நவம்பர் 06 ஆம் தேதி மட்டும் 3,35,189 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து இந்த வருடத்தில் அதிகப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயணிகள் எந்த சேவையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Travel card - ஐ பயன்படுத்தி 27,50,030 பேர் பயணம் செய்துள்ளனர். டோக்கனை பயன்படுத்தி 599 பேர் பயணம் செய்துள்ளனர். குரூப் டிக்கெட் மூலம் 6,208 பேர் பயணம் செய்துள்ளனர். ஆன்லைன் கியூ ஆர் மூலம் 1,57,016 பேரும், பேப்பர் க்யூ ஆர் மூலம் 18,40,921 பேரும், ஸ்டேட்டிக் க்யூ ஆர் மூலம் 2,24,276 பேரும், வாட்ஸ் அப் மூலம் 5,40,257 பேரும் பேடிஎம் மூலம் 3, 90, 030 பேரும், போன் பே மூலம் 2,99,396 பேரும் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ONDC மூலம் 1,10,567 பேரும், என்.சி.எம்.சி சிங்கார சென்னை கார்டு மூலம் 20,42,192 பேரும் மெட்ரோவில் பயணம் செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.