மேலும் அறிய
Advertisement
Rasipalan December 03 : மீனத்துக்கு சாதகம்! மேஷத்துக்கு பயணம் - உங்கள் ராசிபலன்?
Rasi Palan Today, December 03: இன்று கார்த்திகை மாதம் 18ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 03, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மனதளவில் புதிய தேடல்கள் உருவாகும். ஓய்வு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
சகோதரர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். செலவுகளால் கையிருப்புகள் குறையும். எண்ணிய பணிகளில் சில மாற்றம் ஏற்படும். மறைமுகமான விமர்சனம் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். ஆரோக்கியம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். தடைப்பட்டு வந்த ஒப்பந்தப் பணிகள் சாதகமாகும். நலம் மேம்படும் நாள்.
கடக ராசி
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வியாபார பணிகளில் மந்தமான போக்குகள் காணப்படும். சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பலம் மற்றும் பலவீனங்களை பற்றி புரிந்து கொள்வதற்கான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிப்படையான குணங்கள் மூலம் பலரின் அறிமுகங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பணி நிமித்தமான இழுபறியான சில வேலைகள் முடியும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
துலாம் ராசி
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலமாக மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு ராசி
தற்பெருமை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்புகள் உண்டாகும். சில செயல்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றங்கள் உருவாகும். விலையுயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையாட்களிடம் ஒத்துழைப்பு உருவாகும். முயற்சி மேம்படும் நாள்.
மகர ராசி
வித்தியாசமான பொருட்கள் மீதான ஆர்வத்தினால் விரயங்கள் ஏற்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பும் முன்னேற்றமும் காணப்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான பொருட்களில் ஆர்வம் உண்டாகும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
கும்ப ராசி
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்கால சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். இணையத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள் .
மீன ராசி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். விலகி சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்பு மறையும் நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion