Morning Headlines: நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.. குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு.. முக்கிய செய்திகள்!
Morning Headlines January 30: இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- அரசு வேலை, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி அறிவிப்பு - 6,244 காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தேதி ஜுன் 9ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.அதன்படி, வரும் ஜுன் மாதம் 6ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024, அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது. மேலும் படிக்க
- நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத்தொடர் - இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்..!
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் உரையுடன் நாளை தொடங்குகிறது. மேலும் படிக்க
- பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்.. ஆளுநர் ரவிக்கு பதிலடி தந்த அமைச்சர் ஐ.பெரியசாமி
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ரவி சொந்த கருத்துகளை கூறுவதாக, அமைச்சர் ஐ. பெரியசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கு ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ. 1.20 லட்சம் ஆகும். இத்திட்டத்தில் ஒன்றிய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு மாநிலத்தின் நிதி பங்களிப்பாக 1 இலட்சத்து 68 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ சட்டம் அமல்- மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு
நாடு முழுவதும் ஒரு வாரத்துக்குள் சிஏஏ எனப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் பேசியுள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ’’குடியுரிமைத் திருத்தம் சட்டம் அமல்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் அது இந்த நாட்டுக்கான சட்டம்’’ என்று தெரிவித்து இருந்தார். மேலும் படிக்க
- பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு.. பீர் வகை ரூ. 10 வரை அதிகரிப்பு
மதுபானங்களின் மீதான கலால் வரி மீதான வரி உயர்த்தப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 375 மி.லி., 750 மி.லி., 1,000 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபானங்கள் அந்தந்த ரகத்துக்கு ஏற்ப உயர்த்தப்பட்டு விற்கப்பட இருக்கிறது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க