Morning Headlines: கர்நாடகா, உ.பியில் மாநிலங்களவை தேர்தல்..பிரதமர் மோடி வருகையொட்டி போக்குவரத்து மாற்றம்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines February 27: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- சிங்கங்களுக்கு சீதை, அக்பர் பெயர்! வனத்துறை அதிகாரி சஸ்பெண்ட்!
சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வு பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், சமீபத்தில் புதிய சர்ச்சை வெடித்தது. சீதா என்ற பெண் சிங்கத்தையும் அக்பர் என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எதிர்ப்பு தெரிவித்தது மட்டும் இன்றி, இரு சிங்கங்களையும் ஒரே வனவிலங்கு பூங்காவில் வைத்திருக்கும் வனத்துறையின் முடிவுக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கொல்கத்தா உயர் நீதிமன்ற ஜல்பைகுரி கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் படிக்க..
-
கர்நாடகா, உ.பியில் மாநிலங்களவை தேர்தல் - கட்சி மாறி வாக்களிக்கும் எம்,.எல்.ஏக்கள்? வெற்றி யாருக்கு?
மாநிலங்களவையில் காலியாக உள்ள 15 உறுப்பினர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 உறுப்பினர் இடங்களுக்கு, ஏற்கனவே 41 தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, அசோக் சவான் மற்றும் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், எல் முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், உத்தரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சார்பிலான 15 மாநிலங்களவை தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. மேலும் படிக்க..
- ரூ.10,417.22 கோடி மதிப்பிலான திட்டங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார் - உங்க மாவட்டத்திற்கு என்ன பலன்?
முதலமைச்சர் ஸ்டாலின் திட்டப் பணிகளை திறந்து வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்ட உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, பல்வேறு துறைகளின் சார்பில் 8,801 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். அதைதொடர்ந்து, 1615 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த திட்டங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் மூலம் உங்கள் மாவட்டத்திற்கான பலன்கள் என்ன என்பதை அறிந்துகொள்ளுங்கள். மேலும் படிக்க..
- இது சமாதி இல்ல.. கலைஞரின் தாஜ்மஹால்.. நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
கலைஞர் நினைவிடம் கனவு உலகம் மாதிரி உள்ளது என திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள அருகருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி நினைவிடங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நினைவிடம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டப்பட்டது. இதனிடையே தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார். மேலும் படிக்க..
- பொதுமக்கள் கவனத்திற்கு..! பிரதமர் மோடி வருகை - பல்லடம், மதுரை, கோவையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தர உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பிக்களை பெற கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவே நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மேலும் படிக்க..