Morning Headlines: செந்தில் பாலாஜி பிணை மனு இன்று விசாரணை.. 2 நாள் பயணமாக கத்தார் சென்றார் பிரதமர் மோடி.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines February 15: இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இன்று தொடங்குகிறது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி (இன்று) முதல் காலை 10.30 மணிக்கு தொடங்குகின்றன. இன்று தொடங்கும் இந்த தேர்வானது மார்ச் 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதியும் முடிவடைகிறது. இந்த தேர்வை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 39 லட்சத்திற்கும் அதிகமாக மாணவர்கள் எழுதுகின்றனர். இந்தநிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்குள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- காரசாரமான வாதங்களுக்கு மத்தியில் இன்று மீண்டும் விசாரணை.. செந்தில் பாலாஜிக்கு கிடைக்குமா ஜாமின்?
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், ” சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45 வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது. டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது குறித்து விசாரணையின் போது தான் நிரூபிக்க முடியும் என அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. மேலும் படிக்க..
- தேர்தல் பத்திரம் திட்டம் செல்லுபடியாகுமா? - இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்!
அரசியல் கட்சிகளுக்கு நிதிகளை வாரி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டம் சட்டப்பூர்வமானது என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொதுவாக அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஒருவரிடம் நன்கொடை பெற்றால் அதன் முழு விபரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்திருந்தது. ஆனால் 2014 ஆம் ஆண்டில் இருந்து மத்தியில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2018 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..
- 2 நாள் பயணமாக கத்தார் சென்றார் பிரதமர் மோடி.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கத்தார் சென்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி 7வது முறையாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி அபுதாபி விமான நிலையம் சென்றடைந்த அவரை ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் அகமத் பின் சயீத் அல் நஹ்யான் கட்டித்தழுவி வரவேற்றார். இதன்பின்னர் இருவரும் வர்த்தகம், முதலீடு, டிஜிட்டல் கட்டமைப்பு,எரிசக்தி , இருநாட்டு மக்களிடையேயான நல்லுறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - அதிபர் நஹ்யான் இடையே பல்வேறு துறைசார் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் படிக்க..