Morning Headlines: நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகள்.. INDIA கூட்டணியின் 4-வது கூட்டம்.. இன்றைய முக்கியச் செய்திகள்
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 5 கோடி வழக்குகள்: மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரும் மழைக்காலக் கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்ட நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் எவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ளது என நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கேள்வி முன்வைக்கப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- INDIA கூட்டணியின் 4-வது கூட்டம்... முதலமைச்சர் ஸ்டாலின் போடும் மெகா திட்டம்
வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் 28 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டணிக்கு INDIA என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் பிகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலும் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் காரணமாக INDIA கூட்டணியின் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆனால், ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், INDIA கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. மேலும் படிக்க..
- நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம்.. மூளையாக செயல்பட்ட லலித்தை 7 நாள் காவலில் எடுத்த காவல்துறை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு விவகாரங்கள் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரும் மழைக்காலக் கூட்டத்தொடரும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத்தொடரில் சர்ச்சை எதுவும் வெடிக்காமல் சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் (டிசம்பர் 13ஆம் தேதி), மதியம் 1 மணியளவில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் திடீரென மக்களவைக்குள் குதித்தனர். மேலும் படிக்க..
- மைசூர் விமான நிலையத்துக்கு திப்பு சுல்தான் பெயரா? மீண்டும் புயலை கிளப்பும் அரசியல்..
கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போரிட்ட முக்கியமான மன்னர்களில் ஒருவர் திப்பு சுல்தான். கர்நாடகா மாநில எல்லைக்குள் வரும் மைசூரு பகுதியில் 1700களில் ஆட்சி செய்த திப்புசுல்தான், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை முன்னெடுத்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கடந்த 1750ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் பிறந்த திப்பு சுல்தான், மைசூர் பட்டுத் தொழில் வளர்ச்சிக்கு காரணமான புதிய நில வருவாய் அமைப்பு உள்பட பல நிர்வாக சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். மேலும் படிக்க..
- "கூட இருந்த எல்லாருக்கும் நன்றி" நகைக்கடை மோசடி வழக்கில் தப்பிய நடிகர் பிரகாஷ் ராஜ் உருக்கம்!
திருச்சியை தலைமையிடமாக கொண்ட ப்ரணவ் ஜுவல்லர்ஸ் சென்னை, நாகர்கோவில், மதுரை மற்று புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 8 கிளைகளை கொண்டு செயல்பட்டு வந்தது. அதோடு, புதிய நகை சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடையே பணத்தை வசூலித்தது. ஆனால், சொன்னபடி பலன்கள் கிடைக்கவில்லை எனவும், செய்த முதலீட்டையும் திருப்பி தரவில்லை என வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க..