Morning Headlines: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள்.. நொடிக்கு 2.5 பிரியாணி ஸ்விகியில் ஆர்டர்! இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. நள்ளிரவில் காத்திருந்து சாமி தரிசனம்..!
சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் நள்ளிரவிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயில் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலை பொறுத்தவரை மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். மேலும் படிக்க..
- ஒரு நொடிக்கு 2.5 பிரியாணி ஸ்விகியில் ஆர்டர்! ரூ.42 லட்சத்துக்கு ஆர்டர் செய்த மும்பைவாசி! சுவாரஸ்யம்!
இந்தியாவிலே பெரும்பாலான மக்கள் விரும்பும் உணவாக பிரியாணி உள்ளது. விடுமுறை நாட்கள், விசேஷங்கள், பண்டிகை என எந்த ஒரு கொண்டாட்டத்திலும் பிரியாணி தவிர்க்க முடியாத உணவாக உள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, சோமோட்டாவிலும் அதிகளவு ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணியே இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி இந்தாண்டு அதிகளவில் ஆர்டர்கள் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..
- 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14 உயரிய விருதுகளை பெற்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், “கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். மேலும் படிக்க..
- பாதுகாப்பை விட முக்கியமானது எதாவது இருக்கின்றதா? அமித்ஷா பேசட்டும் - கடிதம் எழுதிய கார்கே
இந்திய பாராளுமன்ற மக்களவையில், டிசம்பர் 13ஆம் தேதி பார்வையாளர்கள் வரிசையில் இருந்த இருவர் மக்களவை உறுப்பினர்கள் அமரும் இடத்தில் அத்துமீறி குதித்து புகைக் குண்டுகளை வீசிக்கொண்டே சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாராளுமன்றத்திற்கு வெளியேவும் இருவர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கோரிக்கை வைத்தனர். மேலும் படிக்க..
- காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட 15 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அதிரடி..
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட 15 எம்.பிக்கள் நாடாளுமன்ற நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் படிக்க..
- மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து! நாட்டையே நடுங்க வைத்த அந்த 4 பேர் யார்?
நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று மக்களவையில் இரண்டு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷம் எழுப்பியவர்களும் நேற்றே கைது செய்தனர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் யார்? யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க..