மேலும் அறிய

PM Modi: 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி இதுவரை 14 நாடுகளின் உயரிய விருதை பெற்றுள்ளதாக த்திய வெளியிறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14 உயரிய விருதுகளை பெற்றுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், “கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய நாடுகளின் உயரிய விருதான சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதையும் பெற்றுள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் தற்போது வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, மாலத்தீவு, பஹ்ரைன், அமெரிக்கா பூடான், பிஜி, எகிப்து, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட நாடுகளின் உயரிய விருதை பெற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரமாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், INDIA கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து அரசு தன்கைவசமாக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் அவை நேரத்தில் இரண்டு நபர்கள் உள்ளே நுழைந்து பார்வையாளர்கள் மடத்தில் இருந்து அவைக்குள் குதித்து வண்ண புகை கக்கும் கருவியை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நாட்டையே உளுக்கிய நிலையில், இதற்கு போதிய பாதுகாப்பு இல்லாதது தான் காரணம் என எதிர்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி பரபரப்பான சூழலில் நேற்று பலத்த பாதுகாப்புடன் அவை கூடியது, அப்போது இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டனர். அமலியில் ஈடுபட்ட 15 எம்.பிக்களை அதாவது 14 மக்களவை உறுப்பினர்கள், ஒரு மாநிலங்களவை உறுப்பினரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இந்த குளிர்கால அவை முழுவதும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்துமீறி நுழைந்தவர்களை தடுக்காது ஏன்? யார் இதற்கு காரணம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அத்துமீறலுக்கு இவர்கள் தான் காரணமா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சி.ஆர்.பி.எஃப் மற்றும் indo tibetian border force - இன் தலைவராக இருப்பவர் அனில் தயால்சிங், அவர் தலைமையில் தான விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சகம் தரப்பிலும், போலீசார் தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி குறித்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Parliament Security Breach: பாதுகாப்பை விட முக்கியமானது எதாவது இருக்கின்றதா? அமித்ஷா பேசட்டும் - கடிதம் எழுதிய கார்கே

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget