(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள்.. வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்! முக்கியச் செய்திகள்..
Morning Headlines April 18: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- நாளை வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதில் தேசிய, மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் ஆயிரத்து 600-க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறிப்பாக இதில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் ஆளுநரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளன. மேலும் படிக்க..
- நயினார் நாகேந்திரன் தகுதி நீக்கம்? நெல்லையில் தேர்தல் நடக்குமா? - உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்ட செல்லப்பட்டதாக ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களர்களுக்கு பணம் தரப்படுவதை தடுக்க, தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன தணிக்கை மற்றும் சோதனைகளில், பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தவகையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட, 2 பேரிடமிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் படிக்க..
- தேர்தல் விடுமுறை - டாஸ்மாக்கில் குவிந்த கூட்டம் , ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு ஏப்.17 தொடங்கி ஏப்.19ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இனி வரும் சனிக்கிழமை அன்று தான் திறக்கப்பட உள்ளது. தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த 16ம் தேதியன்று, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் படிக்க..
- பிரச்சாரத்தின்போது உடல்நலக்குறைவு! ஐசியுவில் மன்சூர் அலிகான்? என்ன ஆச்சு?
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், வேலூர் தொகுதியில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார். இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், காலை முதலே மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிலையில், குடியாத்தம் அருகே பிரச்சாரத்தின்போது மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் படிக்க..
- இனி இன்பாக்ஸில் தேடுவது எளிதாகிடும்; வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்!
வாட்ஸ் அப் மெசேஜ்களில் தேவையாவற்றை எளிதாக தேடுவதற்காக ‘ஃபில்டர்ஸ்’ என்பதை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மெசேஜ் செய்வதற்கான செயலியாக இருந்த வாட்ஸ்-அப் தொழில், வேலை உள்ளிட்டவற்றிற்கும் பயன்படும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வபோது பல்வேறு அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. மேலும் படிக்க..