Morning Headlines: தமிழ்நாட்டில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை.. இன்று முதல் கூடுதலாக 10,000 பேருந்துகள்.. முக்கியச் செய்திகள்..
Morning Headlines April 17: இந்தியாவில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- ஓட்டுப்போட ஊருக்கு விரையும் மக்களே.. இன்று முதல் கூடுதலாக 10,000 பேருந்துகள்.. முழு விவரம்
நாடே மிகவும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் இருக்கும் 40 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. அனல் பறக்கும் தேர்தல் களத்தில் கட்சி தலைவர்கள் இன்று இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்த வரையில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே என 4 முனை போட்டி நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படிக்க..
- தமிழ்நாட்டில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை - 6 மணிக்கு மேல் இதெல்லாம் செய்யக்கூடாது..!
தேர்தல் பரப்புரை முடிந்ததும் மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் அங்கிருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் முதற்கட்டமாக நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதோடு, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நிறைவடைந்து, தேசிய, மாநில கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். மேலும் படிக்க..
- நாளை மறுநாள் வாக்குப்பதிவு - வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா? எப்படி பார்ப்பது?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை ஃபோனில் பார்த்து உறுதி செய்வது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, அதிகாரப்பூர்வ தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும் படிக்க..
- "அம்பேத்கரே நினைச்சாலும் அரசியல் சாசனத்தை மாத்த முடியாது" எதிர்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்க உள்ளது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடக்கும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியல் சாசனத்தை மாற்ற பாஜக தலைவர்கள் முயற்சி செய்து வருவதாக பீகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் படிக்க..