Morning Headlines: டெங்கு காய்ச்சல் தொடர்பாக அரசு ஆலோசனை.. சந்திரபாபு நாயுடுவுக்கு வீட்டு காவலா? .. இன்றைய முக்கிய செய்திகள்..!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பரவும் டெங்கு காய்ச்சல், தமிழ்நாடு அரசு செய்யப்போவது என்ன? : தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாவதை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று துறைசார் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரம், பொதுப்பணித்துறை மற்றும் துறைச்சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதில், டெங்கு கொசு ஒழிப்பில் கூடுதலாக கவனம் செலுத்துவது, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது. மேலும் படிக்க
- வீட்டு காவலுக்கு மாற்றப்படுவாரா சந்திரபாபு நாயுடு..? உடல்நிலையில் பிரச்சனையா? இன்று நீதிமன்றத்தில் தீர்ப்பு!
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சிறைக்கு பதிலாக வீட்டு காவலில் வைக்கக்கோரி நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவானது இன்று விசாரணைக்கு வருகிறது. அதேசமயம் சிஐடி சார்பில், ஏஏஜி பொன்னவொலு சுதாகர் ரெட்டி சந்திரபாபு கைது செய்யப்படும் போது அவர் ஆரோக்கியமாக இருந்தார். சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளதால் வீட்டுக்காவலில் வைக்கக்கூடாது என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகை உலுக்கிய நிலநடுக்கம்.. மொரொக்கோவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2800-ஆக அதிகரிப்பு..
வட ஆப்பிரிக்கா நாடானா மொரோக்கோவில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அதிகாலையில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிலோ மீட்டர் (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளின் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர்.மேலும் படிக்க
- ‘இசை நிகழ்ச்சியில் குளறுபடி’ .. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியே.. கைகொடுத்து களத்தில் இறங்கிய யுவன்ஷங்கர் ராஜா..
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சக இசையமைப்பாளர் என்ற முறையில், இந்த கடினமான சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக நிற்கிறேன். இதிலிருந்து பாடங்கள் கற்றுக் கொண்டு வரும் காலத்தில் மேம்படுத்தப்பட வேண்டும்’ என யுவன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- சூப்பர் 4, இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா தீவிரம்..! - ஆசியக்கோப்பையில் இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை
ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் மோதும் போட்டி, கொழும்புவில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. போட்டியின் நேரலையை ரசிகர்கள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் கண்டு களிக்கலாம். சூப்பர் 4 சுற்றில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் படிக்க