Morning Headlines: டிசம்பர் மாதம் தமிழ்நாடு வரும் பிரதமர்.. மத்திய இணை அமைச்சர் மீது வழக்குப்பதிவு..! இன்றைய முக்கியச் செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- டிசம்பர் மாதம் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பயணத்திட்டம் என்ன?
டிசம்பர் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி வருகை தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முக்கியமாக தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் புதிய பாலத்தை திறந்து வைக்க வருகை தருகிறார், மேலும் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இரண்டாம் ஏவுதள அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொள்வார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது: மஹூவா மொய்த்ரா எம்.பி. ஆவேசம்
பாஜக அரசு என்னை இடைநீக்கம் செய்து, நாடாளுமன்றத்தில் இருந்து என்னை வெளியேற்றப் பார்க்கிறது. ஆனால் அவர்களால் என் தலைமுடியைக் கூடத் தொட முடியாது என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மேலும் படிக்க..
- மத்திய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு..! காரணம் என்ன?
கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் உள்ள களமசேரியில் யெகோவாவின் மாநாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தது. இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில் பல பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 2 பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட மத்திய இணை அமைச்சர் ராஜூவ் சந்திர சேகர் மீது கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் படிக்க..
- ரூ.538 கோடி வங்கி கடன் பெற்று மோசடி.. ஜெட் ஏர்வேஸ் நிறுவன சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை..!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கடன் மோசடி செய்த வழக்கில், ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்த்துறை முடக்கி நடவடிகை மேற்கொண்டுள்ளது. தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த 1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி நிறுவனமான உயர்ந்த இந்நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு நஷ்டத்தை சந்திக்க தொடங்கியது. இது விமானத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அந்த நிறுவன பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டது. இதனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அந்நிறுவனம் விமான சேவையை நிறுத்தியது. மேலும் படிக்க..
- தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா! சென்னை முதல் நாகர்கோவில் வரை சிறப்பு ரயில்.. காலை 8 மணிக்கு தொடங்கும் முன்பதிவு..
தீபாவளி பண்டிகைக்கு அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு பயணப்படும் மக்கள் கூட்டத்தால் பேருந்து, ரயில் நிலையங்கள் திண்டாடும். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். மேலும் படிக்க..