Morning Headlines: சென்னையிலும் காற்று மாசு.. பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்.. இன்றைய முக்கிய செய்திகள்
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
-
"இந்திய - அமெரிக்க இரு தரப்பு உறவின் முக்கிய தூணாக பாதுகாப்பு உள்ளது" மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
இந்திய, அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு அமைச்சகமும் பாதுகாப்பு அமைச்சகமும் இணைந்து 2+2 மாநாடு நடத்தி வருகிறது. பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், இந்தாண்டுக்கான மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க..
-
Chennai Air Pollution: மோசமான நிலையில் சென்னையின் காற்றின் தரம்.. அளவுக்கு மீறி வெடி வெடிக்க தொடங்கியதால் ஏற்பட்ட விளைவு..!
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகை என்றாலே நமக்கு பட்டாசுகள் தான் நியாபகம் வரும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசுகள் வெடிக்க காலை ஒரு மணி நேரம் மற்றும் மாலை ஒரு மணி நேரம் என 2 மணி நேரம் மட்டுமே நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த கட்டுப்பாட்டை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் ஆண்டுதோறும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பார்க்க..
-
Diwali 2023: சேலம் மத்திய சிறை கைதிகளால் நடத்தப்படும் பிரிசன் பஜார் கடையில், தீபாவளி ஸ்வீட் விற்பனை அமோகம்..
சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப மேசை தயாரித்தல், துணி தைக்கும் பணி, பேக்கரி பொருட்கள் தயாரித்தல், சிற்றுண்டி தயாரித்தல் போன்று பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. இதற்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகும்போது அவர்களிடம் பணத்தை ஒப்படைப்பது வழக்கம். மேலும் பார்க்க..
-
Yediyurappa Son: கர்நாடக பாஜக தலைவராக எடியூரப்பா மகன் நியமனம்! மூத்த தலைவர்களுக்கு கல்தா!
தென்னிந்தியாவில் பா.ஜ.க. செல்வாக்கு மிகுந்த மாநிலம் கர்நாடகா மட்டுமே ஆகும். அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்தது. அந்த மாநில பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதலமைச்சருமானவர் எடியூரப்பா. கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்த போது வயது காரணமாக பாதியிலே அவருக்கு பதிலாக முதலமைச்சராக பசவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டார். மேலும் பார்க்க..
-
உஷார்.. மோசமாகும் காற்று மாசு.. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அலர்ட்
காற்று மாசுபாட்டின் காரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்கள், வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது.
நாட்டின் முக்கிய முக்கிய நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் இருப்பதாக காற்றின் தரத்தை கண்காணிக்கும் IQAir தகவல் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் பொதுமக்கள் சுவாசிக்க முடியாத அளவுக்கு வெகுவாக பாதிக்கப்பட்டனர். மேலும் பார்க்க..