Morning Headlines: 2023-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்; தெலங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல் - முக்கிய செய்திகள்
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- Lunar Eclipse: 2023-ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்...இந்தியாவில் இன்று அதிகாலை 1.05 மணிக்கு பார்க்க முடிந்தது...வாவ்!
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும், சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும்போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும், சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக, ஆண்டுக்கு இரண்டும் சந்திர கிரகணமும், இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். மேலும் படிக்க
- Mahua Moitra : "பாஸ்வேர்ட் கொடுத்ததும், பரிசை பெற்றதும் உண்மை" லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் திருப்பம்.. மொய்த்ரா பகீர்
பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். மேலும் படிக்க
- Telangana Election 2023: தெலங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல்; முக்கிய தொகுதிகள், கூட்டணி & பிரச்னைகள் - ஓர் அலசல்
நாட்டின் மிகவும் இளமையான மாநிலமான தெலங்கானாவில் வரும் நவம்பர் 30ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க கே.சி.ஆர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், முதன்முறையாக ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் படிக்க
- Rajasthan Election: ராஜஸ்தானில் இழந்த செல்வாக்கை மீட்டெடுப்பாரா வசுந்தரா ராஜே? பாஜக செம்ம ஸ்கெட்ச்!
சட்டப்பேரவை தேர்தல்களை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி அங்கு ஆட்சியை தக்க வைத்ததாக சரித்திரம் இல்லை. ஆனால், இந்த முறை வரலாற்றை மாற்றி ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல, ஆட்சியை பிடிக்க பாஜகவும் அதிரடி காட்டி வருகிறது. ஆனால், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தேசிய தலைவர்களுக்கு தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, ராஜஸ்தானில் பாஜக முகமாக இருந்த வந்த வசுந்தரா ராஜேவை ஓரங்கட்ட கட்சி மேலிடம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் படிக்க
- "கண்ணுக்கு கண்ணுன்னா முழு உலகமும் குருடாயிடும்" ஐநா தீர்மானத்தை புறக்கணித்த இந்தியா: கொந்தளித்த பிரியங்கா
பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் நடந்து வரும் போர், உலக நாடுகளை நெருக்கடியில் தள்ளியுள்ளது. உலக அமைதிக்கு பெரும் சவாலாக மாறியுள்ள இஸ்ரேல் போரால் பாலஸ்தீன காசா பகுதியில் இதுவரை, 3,500 குழந்தைகள் உள்பட 7,703 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபுறத்தில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என அரபு நாடுகளும் ஐநாவும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. மேலும் படிக்க