மேலும் அறிய

Morning Headlines: தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இந்திய கேப்டன்.. மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் கரடி.. இன்றைய முக்கியச் செய்திகள்..

Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தெலங்கானாவில் காங்கிரசுக்காக களமிறங்கும் முன்னாள் இந்திய கேப்டன்

தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் ஜூப்லி ஹில்ஸ் தொகுதிக்கான வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் படிக்க..

  • மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் கரடி, சிறுத்தை; கேமராவில் பதிவான நடமாட்டம் - பயத்தில் பக்தர்கள்!

திருப்பதி திருமலையில் உள்ள மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை, கரடிகளின் நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையாக இருக்க தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. ஆந்திராவில் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமையான் கோயில் உள்ளது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். ஆந்திராவை சுற்றியுள்ள தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த பக்தர்களே இங்கு அதிகளவில் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் படிக்க..

  • "ஆட்சி அமைத்தால்.. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் முதலமைச்சர்" அமித் ஷா பக்கா பிளான் 

இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் கே.சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து 2018ஆம் ஆண்டின் இறுதியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியே வெற்றிபெற்றது. மேலும் படிக்க..

  • இரண்டாவது திருமணம் செய்யக்கூடாதா? ஆப்பு வைத்த அஸ்ஸாம் அரசு...!

அஸ்ஸாமில் அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என்றால் அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள், பண்பாடு உள்ளது. அதற்குகேற்ப ஒவ்வொரு மாநிலத்தில் திருமணங்கள், பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் மற்ற மாநிலத்தை காட்டிலும் அஸ்ஸாம் மாநிலம் வித்தியாசமான பழக்க வழக்கங்களை கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருமணம் முறைகள் வித்தியாசமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க..

  • "31ஆம் தேதில ஆஜராக முடியாது" லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் மொய்த்ரா ஆவேசம்

நாடாளுமன்றத்தில் அதிரடியான கேள்விகளை எழுப்பி தேசிய அளவில் பிரபலம் அடைந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு இவர் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் படிக்க..

  • "ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்கனும்" இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி அட்வைஸ் - கொந்தளித்த நெட்டிசன்கள்

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி சொன்ன கருத்துக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் சமூக வலைதளங்கில் பலரும் பேசி வருகின்றனர். இன்று பலரது வாழ்க்கை முறை கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகி உள்ளது. அதுவும் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு  பல நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற ஆப்ஷனையே தேர்வு செய்கின்றனர்.  இதனால், அலுவலகத்தில் இருந்து வேலை பார்ப்பதை விட, வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர். மேலும் படிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget