National Headlines: ஒபாமாவை குறிவைக்கும் பாஜக..தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக... இன்றைய தேசிய செய்திகள்..
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
![National Headlines: ஒபாமாவை குறிவைக்கும் பாஜக..தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக... இன்றைய தேசிய செய்திகள்.. Top news in india today abp nadu morning top india news 27th june 2023 tamil news National Headlines: ஒபாமாவை குறிவைக்கும் பாஜக..தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக... இன்றைய தேசிய செய்திகள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/27/3f172427c1b854a2dd48d3a1b138a88f1687836729431571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- Meghalaya HC: 16 வயதினருக்கு உடலுறவில் ஈடுபடும் முடிவை எடுக்க திறன் உண்டு - நீதிமன்றம் சொன்னது என்ன?
மேகலாயாவில் 16 வயது சிறுமியின் தாயார் ஒருவர் தனது மகளை காதலிப்பதாக கூறி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் பிரிவு 3 மற்றும் 4ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை மேகலாயா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட நபரின் வாக்குமூலத்தில், தானும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 16 வயது சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும், இருவரும் முழு சம்மதத்துடனே உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் படிக்க
- YouTuber Died: பிரபல யூடியூபர் விபத்தால் மரணம்.. இரங்கல் தெரிவித்த முதல்வர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரும், யூடியூபருமான தேவராஜ் படேல் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.கிடைத்த தகவலின்படி, யூடியூபர் தேவராஜ் படேல் ராய்பூரில் தனது யூடியூப் வீடியோவுக்காக கண்டெண்ட் எடுக்க சென்றபோது, பிற்பகல் 3.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது தேவராஜ் படேல் மீது லாரி மோதியதில் தலை மற்றும் உடல் உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காயமின்றி தப்பிய பைக் ஓட்டிய ராகேஷ் மன்ஹர் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். அதை தொடர்ந்து, படேல் அதிவேகமாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோது அவர், இறந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- ரூ. 2000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்படுமா? - ரிசர்வ் வங்கி ஆளுநர் பதில்..!
புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு, 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில், லட்சக்கணக்கான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதாக பொருளாதார ஆய்வறினர்கள் கூறுகின்றனர். மேலும் படிக்க
- ஒபாமாவை குறிவைக்கும் பாஜக தலைவர்கள்.. இஸ்லாமியர் விவரகாரம் - ராஜ்நாத் சிங் சரமாரி குற்றச்சாட்டு
ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு தொடர்பான மாநாட்டில் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். அதைதொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜ்நாத் சிங் “உலகில் வாழும் அனைத்து மக்களையும் குடும்ப நபர்களாக கருதும் ஒரே நாடு இந்தியா என்பதை ஒபாமா மறந்துவிடக் கூடாது. அவர் அமெரிக்க பிரதமராக இருந்தபோது எத்தனை முஸ்லிம் நாடுகளைத் தாக்கியுள்ளார் என்பதையும் ஒபாமா சிந்திக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும் படிக்க
- தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக... சர்ப்ரைஸ் கொடுத்த அதிமுக... உலகின் மிக பெரிய கட்சி எது..? வெளியான பட்டியல்
தொண்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மிக பெரிய கட்சிகளின் பட்டியலை வேர்ல்ட் அப்டேட்ஸ் ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. 41 ஆயிரத்து 600 ஃபாலோயர்களை கொண்ட இந்த ட்விட்டர் பக்கம் வெளியிட்ட தகவலின்படி, பாஜக முதலிடத்தை பிடித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியும் இடம்பெற்றுள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடத்தில், இந்திய தேசிய காங்கிரஸ், அமெரிக்காவின் குடியரசு கட்சி, துருக்கியின் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)