Morning Headlines: நிலவில் 8 மீட்டர் தூரம் நகர்ந்த ரோவர்..வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்..முக்கிய செய்திகள் இதோ!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
![Morning Headlines: நிலவில் 8 மீட்டர் தூரம் நகர்ந்த ரோவர்..வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்..முக்கிய செய்திகள் இதோ! Top news in India today ABP Nadu morning top India news 26 August 2023 Tamil news Morning Headlines: நிலவில் 8 மீட்டர் தூரம் நகர்ந்த ரோவர்..வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்..முக்கிய செய்திகள் இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/26/c958a9dff8bfb9e610992038077ec7ec1693019337684572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- Rahul Gandhi: லடாக் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது.. பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் ..ராகுல் காந்தி உறுதி
முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 19ஆம் தேதி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றார். கடந்த ஒரு வாரமாக, லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், லடாக் மக்கள் குறித்து இன்று பேசிய ராகுல் காந்தி, அவர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும் லடாக் மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- Chandrayaan 3 Rover: பிரக்யான் ரோவர் நிலவில் இதுவரை பயணித்த தூரம்.. அடுத்த அப்டேட் கொடுத்த இஸ்ரோ!
நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர், 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரின் முக்கியப் பகுதிகளான LIBS, APXS செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், லேண்டர், உந்து விசைக்கலம், ரோவர் ஆகியவை திட்டமிட்டபடி சிறப்பாக செயல்படுவதாகவும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ரோவரில் உள்ள அனைத்து அறிவியல் ஆய்வுக் கருவிகளும் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- PM Degree Defamation Case: பிரதமர் மோடியின் கல்வி விவரம் குறித்து அவதூறு பரப்பினாரா கெஜ்ரிவால்? உச்சநீதிமன்றம் அதிரடி
பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக தொடர் சர்ச்சை நீடித்து வருகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது. இதை தொடர்ந்து, 1978ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரி இருந்தார். மேலும் படிக்க
- Punjab President Rule: பஞ்சாபில் குடியரசு தலைவர் ஆட்சியா? பகீர் கிளப்பிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் கடிதம்
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்குவங்கம், டெல்லி என இந்த பட்டியல் நீள்கிறது. சமீபத்தில், டெல்லி அரசின் அதிகாரங்களை நிலைநாட்டி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவால் அரசின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் தொடர் அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சூழலில், இந்த பட்டியலில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாப் இணைந்துள்ளது. மேலும் படிக்க
- Congress Promise: பெண்களுக்கு ரூ. 1500 உரிமைத்தொகை.. ரூ. 500க்கு சிலிண்டர்.. வாக்குறுதிகளை அள்ளிவீசிய காங்கிரஸ்
பாஜக ஆளும் முக்கியமான மாநிலங்களில் ஒன்று மத்தியப் பிரதேசம். கடந்த 2003ஆம் ஆண்டு முதல் நடுவில் ஓராண்டை தவிர கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சி செய்து வரும் மாநிலம். பாஜக ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)