மேலும் அறிய

Rahul Gandhi: லடாக் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது.. பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் ..ராகுல் காந்தி உறுதி

கடந்த ஒரு வாரமாக, லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 19ஆம் தேதி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றார். கடந்த ஒரு வாரமாக, லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

லடாக்கிற்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி:

இந்த சூழ்நிலையில், லடாக் மக்கள் குறித்து இன்று பேசிய ராகுல் காந்தி, அவர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும் லடாக் மக்களின் பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், வேலைவாய்ப்பு குறித்த மத்திய அரசின் வாக்குறுதிகள் பொய்யாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீது காட்டமான விமர்சனங்களை மேற்கொண்ட அவர், "நான் லடாக்கின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழைகளுடன் பேசினேன். மற்ற தலைவர்கள், தங்கள் 'மன் கி பாத்' பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நான் உங்கள் 'மன் கி பாத்' (மனதில் இருப்பதை) கேட்க விரும்புகிறேன்.

"லடாக் மக்களின் குரல் நசுக்கப்படுகிறது"

இந்தியாவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனா அபகரித்துள்ளது. இதை மறுப்பதன் மூலம் பிரதமர் பொய் சொல்கிறார். இது லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும். லடாக்கின் முக்கியப் பிரச்சனைகள் என்னவென்றால், இங்குள்ள மக்களின் அரசியல் குரல் நசுக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பில் அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன. இங்கு, மொபைல் நெட்வொர்க் மற்றும் விமான இணைப்பு வசதி இல்லை. இந்த விவகாரங்கள் அனைத்தையும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்புவேன்" என்றார்

ராகுல் காந்தியின் லடாக் பயணம் குறித்து விவரித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "பாரத் ஜோடோ யாத்திரையை முன்னெடுத்து, லடாக் மக்களை ராகுல் காந்தி சந்தித்தார். பாத யாத்திரையில் நடந்தது போன்று, அவர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்தார்.
இந்த பிரச்னைகளைக் கேட்ட பிறகு, மோடி அரசு, லடாக்கை பாதுகாக்காமல் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள விட்டுவிட்டது என்பது தெளிவாகிறது. மன் கி பாத்தில் மட்டுமே ஆர்வம் காட்டும் தலைவர்கள் மக்களின் குரலைக் கேட்க அனுமதிப்பதில்லை" என்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்முறையாக ராகுல் காந்தி, அங்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். லடாக்கை தொடர்ந்து, ராகுல் காந்தி கார்கிலுக்கு செல்ல உள்ளார்.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியலமைப்பு 370ஆவது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
Supreme Court: கணவர்களிடம் பணம் பறிக்காதிங்க..! திருமணம் பிசினஸா? பெண்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Ashwin:
Ashwin: "டேய் தகப்பா என்ன இதெல்லாம்?" அப்பா குற்றச்சாட்டுக்கு அஸ்வின் தந்த விளக்கத்தை பாருங்க!
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Breaking News LIVE : சென்னையில் காலையிலே மழை! இன்றுடன் நிறைவு பெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Embed widget