Morning Headlines: வேட்பாளர்களை அறிவித்த பாஜக.. கனடாவுக்கு கெடு விதித்த இந்தியா - 9 மணி முக்கிய செய்திகள்
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- பயங்கர ப்ளான்! 92 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பாஜக.. மத்திய பிரதேசத்தில் வெற்றி யாருக்கு..
மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள் பாஜக ஆட்சிதான். பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டு வந்த மாநிலங்களில் ஒன்றான மத்திய பிரதேசத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றிபெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவியது. மேலும் படிக்க..
- ககன்யான் சோதனை: பக்கா safe.. எஸ்கேப் மாட்யூலை பத்திரமாக மீட்ட இந்திய கடற்படை..
ககன்யான் திட்டத்தின் முதற்கட்ட சோதனையாக வானில் ஏவப்பட்ட மாதிரி விண்கலத்தை இந்திய கடற்படை மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மீது இஸ்ரோ தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளது.
இந்நிலையில், ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை விண்கலமான (டிவி-டி1) என்ற ஒற்றை-நிலை திரவ ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக 30 நிமிடங்கள் தாமதமானது. அதேநிலை தொடர்ந்ததால், பரிசோதனை முயற்சி 8.45 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் படிக்க..
- ரேஸில் முந்துவார்களா அசோக் கெலாட், சச்சின் பைலட்? வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. பரபரக்கும் ராஜஸ்தான்..
கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் 100 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. தற்போது, ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், இந்த முறை ஆட்சியை தக்க வைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் படிக்க..
- தூதரக விவகாரத்தில் கனடாவுக்கு கெடு விதித்த இந்தியா.. வியட்நாம் ஒப்பந்தத்தை மீறியதா? உண்மை என்ன?
இருநாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான அதிகாரிகளின் எண்ணிக்கையை, சமமாக கொண்டு வர கனடா அரசுக்கு இந்தியா முதலில் ஒரு மாதமும், அதைதொடர்ந்து கூடுதலாக 10 நாட்களும் இந்திய அரசாங்கம் அவகாசம் வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. காலிஸ்தான் ஆதரவாளரான நிஜ்ஜார் தங்களது நாட்டில் கொல்லப்பட்டதில், இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக கனடா அரசாங்கம் குற்றம் சாட்டியது. மேலும் படிக்க..
- ’நிலவில் இந்தியன் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை’ – பிரதமர் மோடி நம்பிக்கை..
நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மேலும் படிக்க..
- மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் பயங்கரவாத செயலா? நியூச் கிளிக் விவகாரத்தில் சரமாரி கேள்வி..
நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி, அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவையும் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தனர். மேலும் படிக்க..