மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?
பொங்கல் பண்டிகையை முன்னிடு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை சைதாப்பேட்டை 169வது வார்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிடு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி இலவச வேட்டி செலையும் தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக சென்று டோக்கன் கொடுக்கும் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரப்படி பயணர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சைதாப்பேட்டையில் இருந்து தொடங்கி வைக்கிறார்.
இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 அறிவிப்பில் வெளியாகவில்லை. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணத்தால் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். ஆனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள், திமுக கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதையடுத்து சட்டப்பேரவை சிறப்பு பரிசாக பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு அறிவிப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.