Morning Headlines: பேருந்து தீ விபத்தில் 25 பேர் உயிரிழப்பு.. கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் அபராதம்.. நாட்டின் முக்கிய நிகழ்வுகள்..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- மகாராஷ்ட்ராவில் ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து.. 25 பேர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 25 பயணிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கி பேருந்து ஒன்று 32 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சம்ருத்தி மகாமார்க் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்தது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்ட்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் படிக்க
- டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி.. செல்ஃபி, புகைப்படம் எடுத்த மக்கள்..
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.அப்போது பயணிகளுடன் அவர் உரையாடினார்.பிரதமரின் மெட்ரோ ரயில் பயணம் குறித்து ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியம் தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் படிக்க
- பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..தொடரும் இணை சேவை முடக்கம்..மணிப்பூர் அரசு உத்தரவு..!
மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக இனக்கலவரமும் போராட்டமும் தொடர்ந்து வருகிறது. கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், எதுவும் பயன் தந்ததாக தெரியவில்லை. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. இதனிடையே இணைய சேவை முடக்கத்தை ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டித்து மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல ஜூலை 8ஆம் தேதி வரை, பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.மேலும் படிக்க
- பிரதமர் மோடியின் டிகிரி சான்றிதழ் விவகாரம்...கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்களை வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்று கொண்ட நீதிபதி பிரேன் வைஷ்ணவ், குஜராத் பல்கலைக்கழகம், மத்திய அரசு, தலைமை தகவல் ஆணையர் மற்றும் முன்னாள் தலைமை தகவல் ஆணையர் எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 7ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் படிக்க
- பதவி விலக மாட்டேன் என்ற முதலமைச்சர்.. கிழித்தெறியப்பட்ட ராஜினாமா கடிதம்..
மணிப்பூர் கலவரத்தை சரியாக கையாளாததால் முதலமைச்சர் பைரன் சிங், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இதனிடையே, தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார்.இது தொடர்பான தகவல் வெளியான நிலையில், மக்கள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியுள்ளனர். பொது மக்களின் அழுத்தம் காரணமாக மனம் மாறிய பைரன் சிங், பதவி விலகும் முடிவை பைரன் சிங் திரும்ப பெற்றதாக தெரிவித்தார். மேலும் படிக்க