PM Travel on metro Rail: டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடி.. செல்ஃபி, புகைப்படம் எடுத்த மக்கள்..!
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.அப்போது பயணிகளுடன் அவர் உரையாடினார்.
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார். மெட்ரோ ரயிலில் முறைப்படி செக் இன் செய்து ரயில் பெட்டிக்கு சென்ற பிரதமர், தமக்கான இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.
மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி:
அப்போது, மற்ற பயணிகளின் பகுதிக்குச் சென்ற அவர், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என பலரிடமும் உரையாடினார். பிரதமர் ஆர்வமுடன் உரையாடியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர். பிரதமரின் மெட்ரோ ரயில் பயணம் குறித்து ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியம் தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi interacts with people in Delhi Metro on his way to attend the centenary celebrations of Delhi University. pic.twitter.com/BGmewjqTP2
— ANI (@ANI) June 30, 2023
பின்னர் டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். நாட்டில் உள்ள ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள், புதிய இந்தியாவுக்கான தொகுப்புகளாக உள்ளதாக கூறினார். பல்கலைக்கழக கல்வி பெறுவதில் ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகரித்துள்ளதாக கூறிய பிரதமர், கியூஎஸ் உலக தரவரிசையில் 2014-ஆம் ஆண்டு 12 இந்திய பல்கலைக்கழகங்கள் இருந்ததாகவும், தற்போது 45 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
இதேபோன்று, 2014-ல் சுமார் 100 ஸ்டார்ட் அப்கள் மட்டுமே இருந்ததாகவும், தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் படிக்க