Morning Headlines June 18: சுடச்சுட..! காலை 9 மணி தேசிய தலைப்புச்செய்திகள்..! நடந்தது என்னென்ன?
Morning Headlines June 18: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான புகைப்படங்கள், வீடியோ சாட்சிகளுடன் 1500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சுமார் 1500 பக்க குற்றப்பத்திரிகையில், ஆறு பெண்களின் புகார்களில் குறைந்தது நான்கிற்கு (மல்யுத்த வீரர்கள்) புகைப்பட ஆதாரம் மற்றும் வீடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளன. விசாரணையின் ஒரு பகுதியாக பதிவு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களில், பாதிக்கப்பட்டவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமான நபர்களின் வாக்குமூலங்கள் மட்டுமே குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக PTI செய்தி நிறுவனம் முன்பு தெரிவித்தது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/1500-page-chargesheet-filed-against-brij-bhushan-charan-singh-with-photos-video-witnesses-123706
"பெண்கள் குட்டையான ஆடைகளை அணியக்கூடாது" : ஹிஜாப் பிரச்சனையில் தெலங்கானா அமைச்சர் மஹ்மூத் அலி!
ஹைதராபாத்தில் உள்ள கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் பட்டயக் கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வெள்ளிக்கிழமை தேர்வு மையத்திற்கு வந்தபோது, முதலில் தேர்வு அறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். பின்னர், ஹிஜாபை கழற்றிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்."பெண்கள் குட்டையான ஆடைகளை அணிந்தால் பிரச்னைகள் ஏற்படும். எங்கள் கொள்கை முற்றிலும் மதச்சார்பற்ற கொள்கை. ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பியதை அணிய உரிமை உண்டு," என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/women-should-not-wear-short-dresses-karnataka-home-minister-mahmood-ali-on-hijab-issue-123698
பாகிஸ்தான், சீனாவுக்கு மெசேஜ் சொல்கிறதா பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்..!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்நாட்டின் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 21 முதல் ஜூன் 24 வரை அமெரிக்கா செல்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/s-jaishankar-on-pm-modi-america-state-visit-says-highest-level-of-honour-123708
Operation Ganga : "மக்களுடன் துணை நிற்கும் உறுதியை குறிக்கிறது".. ஆபரேஷன் கங்கா குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..!
'கிணத்துல குதிப்பேன்’ : காங்கிரஸ் கட்சியில் சேரும்படி வந்த அழைப்பு.. ரக்கட் பாயாக மாறி பதிலளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...!
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் நிதின் கட்கரி. கட்சியின் தலைவர் உள்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர், தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர், கட்சியில் தேசிய அளவில் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். காங்கிரஸ் கட்சி குறித்து பேசிய அவர், "கட்சி உருவானதில் இருந்து கட்சி பலமுறை பிளவுபட்டது. நமது நாட்டின் ஜனநாயக வரலாற்றை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த காலத்திலிருந்து நாம் எதிர்காலத்திற்கு பாடம் கற்க வேண்டும்” என்றார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/nitin-gadkari-recounts-offer-to-join-congress-says-would-rather-jump-in-well-123701