Morning Headlines: மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்.. தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்.. இன்றைய முக்கிய செய்திகள்..
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆஃபர்.. தீபாவளி போனஸிற்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசு..
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகள் உட்பட குரூப் சி மற்றும் வர்த்தமானி அல்லாத குரூப் பி தரவரிசையில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு தற்காலிக போனஸ் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போனஸ் பலருக்கும் உதவிகரமாக இருக்கும். மேலும் படிக்க..
- சிக்கித் தவிக்கு சந்திரபாபு நாயுடு.. சிறைவாசம் நீடிக்குமா? உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
ஊழல் வழக்கில் சிக்கி தற்போது சிறையில் உள்ள ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சட்டப் போராட்டத்தில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, முதலமைச்சராக பதவி வகித்தபோது, திறன் மேம்பாட்டு துறையின் நிதியை தவறுதலாக பயன்படுத்தி 300 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில அரசியலில் புதிய புயலை கிளப்பியது. மேலும் படிக்க..
- தெலங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு தயாரான காங்கிரஸ்.. கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட எம்.பி திருநாவுக்கரசர்..
தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கண்காணிப்பாளராக சு.திருநாவுக்கரசர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், “காங்கிரஸ் தலைவர் ஒப்புதலின்பேரில் தெலங்கானா தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு கண்காணிப்பாளராக எம்பி திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..
- 2040 க்குள் மனிதனை நிலவுக்கு அனுப்ப வேண்டும்.. விஞ்ஞானிகளுகு அட்வைஸ் கொடுத்த பிரதமர் மோடி..
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி இன்று உயர்மட்ட கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் 'ககன்யான்' திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ளது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஜூலை 23ஆம் தேதி மாலை சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம், நிலவின் மேற்பரப்பில் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கிய நான்காவது நாடு மற்றும் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும் படிக்க..
- தன்பாலினத்தவர் திருமணத்துக்கு நீதிமன்றத்தால் அங்கிகாரம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றம்..
தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் ஒரே விதமான தீர்ப்பை வழங்கியுள்ளனர். எஸ். ரவீந்திர பட், பி. எஸ். நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். மேலும் படிக்க..