Top 10 News Headlines: புற்றுநோய் தடுப்பூசி ரெடி, கோடிகளில் புரளும் பிசிசிஐ, அதானிக்கு ஜாக்பாட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Sept 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

முதலமைச்சர் பெருமிதம்
“சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் காரணமாக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்” -லண்டனில் நடைபெற்ற தமிழ்க் கனவு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுமுதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கம்
பஹ்ரைனில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டியின் Satellite World Cup தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.பி.கனகலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
400 கிலோ கஞ்சா கடத்தல்..
வேலூர்: காட்பாடி கிறிஸ்டியன் பேட்டை சோதனைச் சாவடியில் காவல்துறையினரின் வாகன தணிக்கையின்போது, ஆந்திராவில் காரில் கடத்திவரப்பட்ட சுமார் 400 கிலோ குட்கா பறிமுதல். கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விக்ரம் பாவாட்டி என்பவர் கைது.
வாக்காளர் பட்டியல் மோசடி: விசாரணையை முடக்கிய ECI!
கர்நாடகா: ஆலந்தா சட்டப்பேரவைத் தொகுதியில் 2023ம் ஆண்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து 5,994 பேரை நீக்க முயற்சி நடந்த வழக்கில், கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தேர்தல் ஆணையம் முக்கியத் தரவுகளை பகிர மறுப்பதால் விசாரணை முடங்கியுள்ளது. வாக்காளர்களின் விவரங்களைத் திருடி போலியான Form 7 மனுக்கள் தயார் செய்து ECI-ன் NVSP, VHA மற்றும் Garuda App ஆகிய தளங்களில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மோசடி நடத்தியவர்களைக் கண்டறிய தேவையான Destination IP & Port தரவுகளை ECI இதுவரை தரவில்லை.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கும் திட்டம் அறிமுகம். மாத்ரி பித்ரி வந்தனா எனும் திட்டத்தின் கீழ், நவ. 14,15ம் தேதிகளில் அரசு ஊழியர்கள் சிறப்பு விடுமுறையை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவிப்பு.
அதானி செய்திகளுக்கு தடை
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட டெல்லி நீதிமன்றம் தடை. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அந்நிறுவனத்திற்கு எதிராக வெளியிட்ட அவதூறான கட்டுரைகள் (மற்றும் சமூக ஊடக பதிவுகளை நீக்க வேண்டும் என்றும் உத்தரவு.
பயன்பாட்டுக்கு வந்தது ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி!
ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவிப்பு. mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி உருவாக்கப்படும்.
ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: மைக்ரோசாப்ட் பாதிப்பு!
ஐரோப்பாவை செங்கடல் வழியாக ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவுடன் இணைக்கும் பல சர்வதேச ஆழ்கடல் கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Azure Cloud பிளாட்ஃபார்ம் பாதிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் சேவைகளை பெறுவதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல். ஏமனின் ஹூத்திகள் செங்கடலில் தாக்குதலில் ஈடுபடுவாதல், கேபிள்களை சரிசெய்வது கடினமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கோடிகளில் புரளும் பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) வருவாய் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி அதிகரித்துள்ளது. 2019-ல் ரூ.6,059 கோடியாக இருந்த வங்கி இருப்பு, 2025-ல் ரூ.20,686 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வருவாய் அதிகமாக இருந்தாலும், சர்வதேச விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் ஊடக உரிமை வருமானம் ரூ.813.14 கோடியாகக் குறைவு. எனினும் பிசிசிஐ தொடர்ந்து பல கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி வருகிறது.
இறுதிப்போட்டியில் இந்தியா
12வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: சீனாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி. சூப்பர் 4 சுற்று முடிவில் இந்திய அணி 7 புள்ளியுடன் முதலிடமும், தென்கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.





















