மேலும் அறிய
Top 10 News Headlines: 5 மாவட்டங்களில் கனமழை, ஆசியன் மாநாடு-தவிர்த்த மோடி, ரஷ்யாவிற்கு அமெரிக்கா பொருளாதார தடை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Oct. 23rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்பு.
- வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக வானிலை மையம் தகவல்.
- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.40 குறைந்த நிலையில் ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-த்திற்கும் விற்பனை.
- தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30.2 கி.மீ தூரத்திற்கு ரூ.757.18 கோடியில் 4-வது ரயில் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ஒப்புதல்.
- மலேசியாவில் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கும் ஆசியன் உச்சி மாநாட்டில் பங்கேற்க நேரில் செல்லாமல் புறக்கணித்தார் பிரதமர் மோடி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், காணொலிக் காட்சி மூலம் மோடி கலந்துகொள்வார் என அறிவிப்பு.
- இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ‘Bhairav Battalion' என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு.
- ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீதும், அவை சார்ந்த துணை நிறுவனங்களின் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
- உக்ரைன் உடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா ஒத்திகையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் அல்கோரிதமை உருவாக்கி கூகுள் நிறுவனம் புதிய சாதனை.
- ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 1,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement





















