Top 10 News Headlines: காசாவில் பட்டினி சாவு: 21 குழந்தைகள் மரணம்! அன்புமணிக்கு ராமதாஸ் தடை கோரிக்கை, இந்தியா நிதான ஆட்டம்
Top 10 News Headlines Today July 24: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

அன்புமணிக்கு தடை
பாமக பெயர், கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மனு!2026 தேர்தலுக்கான உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி நாளை தொடங்க உள்ள நிலையில் கட்சியில் சலசலப்பு
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு அறிமுகப்படுத்திய மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்களை உடனே திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.இந்தியாவில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் மட்டுமே வறட்சியையும் காலநிலை மாற்றத்தையும் தாங்கி வளரக்கூடியவை என முழக்கம்.
பட்டினியால் குழந்தைகள் இறப்பு
காசாவில் கடந்த 3 நாட்களாக ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் 21 குழந்தைகள் இறந்திருப்பதாக ஐ.நா அதிர்ச்சி தகவல்!இஸ்ரேல் ராணுவத்தின் தீவிர நடவடிக்கையால் காசாவில் உணவு பற்றாக்குறை மற்றும் மனித த்துமீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது, மக்களிடம் பணம் இருந்தாலும் அதை கொண்டு எதுவும் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது.
நிறவெறி தாக்குதல்
ஃப்ளோரிடாவில் காருக்குள் அமர்ந்திருந்த கறுப்பின இளைஞரை போலீசார் ஒருவர் கார் ஜன்னலை உடைத்து வெளியே இழுத்து, தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு!அவரது கார் ஹெட்லைட்கள் அணைக்கப்பட்டிருந்ததாக கூறி போலீஸ் அவரை நிறுத்தியுள்ளனர். கீழே இறங்க பல முறை எச்சரித்தும் அவர் வெளியே வராததால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டெல்லி செல்லும் கமல்
இந்தியனாக எனதக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையை செய்ய உள்ளேன் - ராஜ்யசபா எம்.பி.யாக நாளை(ஜூலை 25) பதவியேற்க டெல்லி சென்ற மநீம தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
மாணவர் சேர்க்கை 3.94 லட்சம் அதிகரிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் பலனாக நேற்று வரையிலும் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 3,94 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளார்கள் என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
முதல் இந்திய வீராங்கனை
மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறும் முதல் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்.அரை இறுதி போட்டியில் சீனாவின் Tan Zhongyi-யை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்;இதன் மூலம் Candidates தொடருக்கும் தேர்வாகி உள்ளார் திவ்யா
இந்தியா நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிதான ஆட்டம்இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 58, ராகுல் 46, சாய் சுதர்சன் 61, கில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 264 ரன்கள் சேர்ப்பு; ஜடேஜா, ஷர்துல் களத்தில் உள்ளனர் நேற்றைய போட்டியில் ரிஷப் பண்ட் காலில் காயம் ஏற்பட்ட நிலையில் 37 ரன்களுடன் வெளியேறினார்
இராணுவங்கள் இடையே மோதல்
கம்போடியா- தாய்லாந்து எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் கடும் மோதல்.கம்போடியா ராணுவம் பதுக்கிவைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் தாய்லாந்து வீரர்கள் 3 பேர் படுகாயம் என குற்றச்சாட்டு; நேற்றிரவு முதல் இரு நாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி மோதல்.
சட்டவிரோத மது விற்பனை: 3 காவலர்கள் சஸ்பெண்ட்
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவுநன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சஸ்பெண்ட்; மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் செல்வேந்திரனையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. கருண் கரட் ஆணை






















