Top 10 News: பிறந்தது ”பீட்டா” தலைமுறை, ஆரம்பமே எகிறிய தங்கம் விலை - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்
நள்ளிரவில் பிறந்த புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்தும், குழுவாக நடனமாடியும், வாழ்த்துகளை பகிரிந்தும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனைக்காக கோயில் மற்றும் தேவாலயங்களில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 2 நாட்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
முதல் நாளே எகிறிய தங்கம் விலை
புத்தாண்டில் ஏற்றத்துடன் தொடங்கிய ஆபரணத் தங்கத்தின் விலை. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து, 57 ஆயிரத்து 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. கிராம் விலை 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 150 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு வாழ்த்து சொன்ன தலைவர்கள்
புத்தாண்ட ஒட்டி இந்திய மக்களுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புத்தாண்டு மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும்,ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும் என வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், அடுத்த 3 மாதங்களுக்கு எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது கடந்த மூன்று காலாண்டுகளாக உள்ள வட்டி விகிதமே, அடுத்த 3 மாதாங்களுக்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வரி உயர்வு காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2 வீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பெட்ரோல் விலை ரூ.96.26 ஆகவும், டீசல் விலை ரூ.86.48 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடங்கியது ஜென் ”பீட்டா” தலைமுறை
ஜென் ஆல்ஃபா மற்றும் ஜென் இசட்டை தொடர்ந்து, இன்று முதல் பிறக்கும் குழந்தைகள் ஜென் பீட்டா என குறிப்பிடப்பட உள்ளன. 2039 வரை தொடர உள்ள இந்த தலைமுறையானது செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் சார்ந்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த தாய்லாந்து
பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடு என்ற அந்தஸ்தை தாய்லாந்து இன்று முதல் பெறுகிறது. அதோடு பொலிவியா, இந்தோனேஷியா போன்ற 8 நாடுகளும் அமைப்பின் உறுப்பினர்களாக மாறியுள்ளன. 2006ம் ஆண்டு ரஷ்யாவால் நிறுவப்பட்ட இந்த அமைப்பில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளும் உள்ளன.
இந்திய அணியின் போட்டி அட்டவணை வெளியீடு
2025ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள மொத்த போட்டிகளின் விவரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, 18 டி20 போட்டிகள், 10 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் அடுத்த ஆண்டு இந்தியா விளையாட உள்ளது.
ஜன.3ம் தேதி 5வது டெஸ்ட் போட்டி:
இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு தயாரானது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. ஒவ்வொரு ஆண்டும் சிட்னி மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் | வகையில் PINK TEST என்ற பெயரில் நடத்தப்படுகிறது