Top 10 News:மோடி டிரம்ப் சந்திப்பு.. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த 9ம் தேதி பதவி விலகிய நிலையில், புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்வதற்கான அவகாசம் முடிந்தும் யாரும் தேர்வு செய்யப்படவில்லை; 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற கெடுவும் நேற்றுடன் முடிவடைந்தது.
நிர்மலா சீதாராமன் vs திமுக எம்.பிக்கள்
திமுக எம்பிக்கள் - நிர்மலா சீதாராமன் வாக்குவாதம் மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா ஸ்ரீதாராமன் பதில் அளித்தபோது திமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, "மத்திய அரசு தமிழகத்துக்கு என்ன வழங்கி உள்ளது" என கேள்வி எழுப்பிய போது, நிர்மலா சீதாராமன் பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக பேசினார்.
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு
உள்துறை உத்தரவு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை உத்தரவு சிஆர்பிஎஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டும் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
ஆற்றில் ஜலசமாதி:
உத்தரப்பிரதேசம்: அயோத்தியா ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சர்யா சத்யேந்திர தாஸ் (87), பிப்ரவரி 12 அன்று உடல்நலக்குறைவால் காலமானார்;இந்நிலையில் அவரது உடல்நேற்று சரயு நதியில் 'ஜல சமாதி' என்ற பெயரில் ஆற்றில் வீசப்பட்டுள்ளது.
மோடி டிரம்ப் சந்திப்பு
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு; அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ட்ரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனிருந்தனர்.
நகைகள் ஒப்படைப்பு:
சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த ஜெயலலிதாவின் 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் தமிழ்நாடு அரசிடம் இன்று ஒப்படைப்படுகிறது. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின்படி சுமார் 1,000 ஏக்கர் (நில ஆவணங்களும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடியுடன் எலான் மஸ்க் சந்திப்பு
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடியை டெஸ்லா நிறுவன சிஇஓ எலான் மஸ்க் சந்தித்து பேசினார். விண்வெளி, தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் குறித்து இருவரும் விவாதித்தோம். குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற இந்திய அரசின் சீர்திருத்தத்தை மேம்படுத்துவது பற்றி பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி 'X' தள பதிவு.
பதிலுக்குப் பதில் வரி
அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு பதிலுக்கு வரி விதிப்போம், இதில் இந்தியாவும் தப்ப முடியாது; பரஸ்பர வரி விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டு அதிபர் டிரம்ப் அதிரடி.
காவல்துறையினர் மக்களுக்குதான் சேவை செய்ய வேண்டும்
பொதுமக்கள் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறையினர் பொதுமக்களுக்குதான் சேவை செய்ய வேண்டுமே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக்கூடாது. காவல்துறையினரை தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தும் நடைமுறையை தவிர்க்க வேண்டும் தமிழக அரசு, டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
போலி இணையதளம் - அர்ச்சகர் கைது
திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் பெயரில் போலி இணையதளம் செயல்பட்ட விவகாரத்தில், கோயில் அர்ச்சகர் கைது.சனீஸ்வரர் கோயிலுக்கு வர முடியாதவர்களுக்காக கோயில் இணையதளத்தில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு பிரசாதம்,அனுப்பிவைப்பது வழக்கம்; பணம் செலுத்திய பின்னரும் பிரசாதம் வந்து சேரவில்லை என புகார் வந்ததில் போலி இணையதளம் நடத்தி பிரசாதம் அனுப்பி வந்தது அம்பலம்; பெண்ணுடன் சேர்ந்து அர்ச்சகரே போலி இணையதளம் நடத்தியது தெரியவந்துள்ளது






















