Valentines day special: எந்த நிற ரோஜா எந்த உணர்வை வெளிப்படுத்தும்?

Published by: ABP NADU
Image Source: Instagram

சிவப்பு ரோஜா

காதலர்கள் பெரும்பாலும் தங்கள் துணைக்கு சிவப்பு நிற ரோஜாவையே அன்பளிப்பாக வழங்குகின்றனர். இது எல்லையற்ற அன்பையும், அளவில்லா பாசத்தையும் வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

Image Source: canva

பிங்க் ரோஜா

பிங்க் நிறம் எனப்படும் இளஞ்சிவப்பு நிற ரோஜா ஒருவரை பாராட்டுவதற்கும், ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படும் ஒரு அடையாளமாக கருதப்படுகிறது.

Image Source: canva

வெள்ளை நிற ரோஜா

வெள்ளை நிற ரோஜா ஆன்மீகம் மற்றும் புதிய தொடக்கங்களை வெளிப்படுத்தும் ஒன்றின் அடையாளமாக உள்ளது.

Image Source: canva

மஞ்சள் நிற ரோஜா

மஞ்சள் நிற ரோஜா நல்ல உடல்நலம் மற்றும் நீடித்த நட்பை வெளிப்படுத்தும் அடையாளமாக திகழ்கிறது.

Image Source: canva

ஊதா நிற ரோஜா

ஊதா நிற ரோஜா மர்மமும் மதிப்பும் நிறைந்த அன்பையும் ஆழ்ந்த சிந்தனையையும் வெளிப்படுத்தும் அடையாளமாக திகழ்கிறது.

Image Source: canva

ஆரஞ்சு நிற ரோஜா

ஆரஞ்சு நிற ரோஜா, நட்பு மற்றும் காதலுக்கு இடைப்பட்ட பாலமாக செயல்படுகிறது .

Image Source: canva