மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சட்டமன்ற கூட்டம் நிறைவு..! ராஜபக்சே தப்பி ஓட்டமா?.. குஜராத் வெற்றி.. ! பல முக்கியச்செய்திகள்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் புதிதாக 3000 காவலர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
- தக்காளி காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு-கேரளா எல்லையில் தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியா:
- அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் மூடப்பட்டுள்ளது.
- தேசத்துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- கேரளா மாநிலத்தில் திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதாந்திர திருகல்யாண் உற்சவம் தொடங்கப்பட்டுள்ளது.
- உக்ரைன் போரால் இந்தியாவிற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- உத்தரகாண்டில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக டெஹ்ரி அணையில் 25 சுற்றுலா படகுகள் சேதம் அடைந்துள்ளன.
உலகம்:
- இலங்கையில் நிலவி வரும் பதட்டமான சூழல் காரணமாக அங்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இலங்கையில் பொது சொத்துகளை சேதப்படும் நபர்களை கண்ட உடன் சுட அதிபர் கோத்தபய ராஜபக்சே ராணுவம் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
- இலங்கையில் சுமார் 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.
- வன்முறையை கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு அதிபர் கோத்தபய வலியுறுத்தல்.
- ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உரையாற்றினார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion