மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: இன்று குரூப் 4 தேர்வு... 4 நாட்களுக்கு மழை எச்சரிக்கை... இன்னும் சில முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு : 7301 பதவிக்கு 22 லட்சம் பேர் போட்டி
- குட்கா வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட 9 பேர் மீது குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
- தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்
- பணம், பத்திரம் முக்கிய ஆவணம் கொள்ளை : ஓபிஎஸ் மீது காவல்துறையில் புகார்
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 28ம் தேதி விடுமுறை அறிவிப்பு
- கரூர் மாவட்டத்தில் 1,677 மையங்களில் இன்று 32-வது கொரோனா தடுப்பூசி முகாம்
இந்தியா :
- எடப்பாடி பழனிசாமியை சந்திக்க பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு என தகவல்
- மாநிலங்களவைவில் முதல் வாரம் 18 மணி நேரம், 44 நிமிடம் வீண்
- சட்டவிரோத மது பார் நடத்தும் ஸ்மிருதி மகள் : அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீட்டுக்கு வீடு தேசிய கொடியை ஏற்றுங்கள்- பிரதமர் மோடி
- வயநாடு மாவடத்தில் கடந்த ஞாயிறு தொடங்கி இதுவரை 349 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கால்நடைத்துறை அதிகாரி பி.ஆர்.ராஜேஷ் தகவல்
- அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு 259.44 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
உலகம் :
- குரங்கு அம்மை நோயினை, சர்வதேச சுகாதார எமர்ஜென்சியாக அறிவித்த உலக சுகாதார அமைப்பு
- ஓடும் காரில் 1 நிமிடத்தில் டயர் மாற்றி கின்னஸ் சாதனை படைத்த இத்தாலியர்கள்
- உக்ரைனுக்கு சுமார் ரூ. 4,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புதல்
- தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒசாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கயில்லா தீர்மானம் தோல்வி
விளையாட்டு :
- இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை உபயதாரராக இருக்கும் பைஜூசுக்கு, நிலுவையில் இருக்கும் கடனை அடைக்க கால அவகாசம் வழங்க முடிவு
- உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் நீரஜ் சோப்ரா களமிறங்க இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion