Theni Army soldier death : மீண்டும் ஒரு அமரன் சம்பவம்! உயிரிழந்த ராணுவ வீரர்! கதறி அழுத மனைவி
ராஜஸ்தானில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு வரப்பட்டு 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. மீண்டும் ஒரு அமரன் சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
தேனி மாவட்டம் பங்களாமேட்டை சேர்ந்த 35 வயதான முத்து என்பவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். ராணுவம் மீது இருந்த ஈடுபாட்டால் 2010ம் ஆண்டு ராணுவத்தில் இணைந்துள்ளார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு ரீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. கடந்த மாதம் விடுமுறையில் வந்த முத்து, குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளார்.
பின்னர் ராணுவ பணிக்கு திரும்பிய அவர், கடந்த 10ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் நடந்த ராணுவ பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக வாகன விபத்தில் சிக்கினார். காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் முத்துவின் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. தனது கணவரின் உடலை பார்த்த தாயும், மனைவியும் கதறி அழுத சம்பவம் அனைவரையும் கலங்க வைத்தது.
21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முத்துவின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் ஒரு அமரன் சம்பவம் நடந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.