மேலும் அறிய

Kanguva: நாளை கங்குவா ரிலீஸ்! முடிவுக்கு வரும் இரண்டரை ஆண்டுகள் வெயிட்டிங்! சூர்யா ரசிகர்களுக்கு தீனியா?

சூர்யா படம் வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் நாளை கங்குவா படம் வெளியாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. சிவா இயக்கியுள்ள இந்த படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதைக்களத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.

நாளை கங்குவா ரிலீஸ்:

திஷா பதானி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் கோவை சரளா, விடிவி கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா ப்ரான்ஸிஸ் – கங்குவா என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படம் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கு பிறகு சூர்யா விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர்., ராக்கெட்ரி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். நடப்பாண்டில் சர்பியா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

இரண்டரை ஆண்டுகள் காத்திருப்பு:

சூர்யா நடிப்பில் எந்த படமும் கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதால் அவரது ரசிகர்கள் கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலரும், படத்தின் ப்ரமோஷனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

சூர்யாவிற்கு ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது. ஆனால், திரையரங்கில் அவரது படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. நாளை கங்குவா படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றியை சூர்யா மிகப்பெரிய அளவில் நம்பியுள்ளார்.

படத்திற்கு சிக்கல்?

சிறந்த நடிகரான சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்தை தயாரித்துள்ளார். கங்குவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் படத்திற்கான முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கங்குவா படம் நாளை வெளியாக உள்ள நிலையில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சொத்தாட்சியருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 20 கோடியையும், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு செலுத்த வேண்டிய ரூபாய் 1.50 கோடியையும் செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால் படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தைச் செலுத்த இன்றே கடைசி நாள் என்பதால் தயாரிப்பு நிறுவனம் பணத்தை இன்றே செலுத்திவிடுவார்கள் என்று கருதப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Embed widget