மேலும் அறிய
Breaking News LIVE 13 Nov : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் காணலாம்.
Key Events

ப்ரேக்கிங் நியூஸ்
Source : twitter
Background
- ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட தேர்தல்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் – நக்சல் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
- கேரளாவின் வயநாடு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு; பிரியங்கா காந்தி போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு
- வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவும் தொடர்ந்து 2வது நாளாக மழை
- தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
- 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி – சீமான் அறிவிப்பு
- தமிழக முதலமைச்சருக்கு சாராய ஆலைகள் உள்ளது என்பதால் கள்ளுக்கடை இல்லை – முதலமைச்சர் மீது சீமான் விமர்சனம்
- பஞ்சாப் மாநிலத்தில் கடும் புகை மூட்டம்; புகைமூட்டத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானங்கள் தாமதம்
- உத்தரபிரதேச அரசுத்தேர்வுப்பணியாளர் ஆணையம் முன்பு தேர்வர்கள், மாணவர்கள் போராட்டம்
- காஷ்மீர் சிறப்பு சட்ட விவகாரம்; காங்கிரஸ் பாகிஸ்தான் போல பேசுகிறது – பிரதமர் மோடி
- பா.ஜ.க. தனது பணக்கார நண்பர்களுக்கு அதிக பணம் வழங்குகிறது – ராகுல்காந்தி பேச்சு
- தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைக்கும் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அதானி – மகாராஷ்ட்ரா துணை முதலமைச்சர் அஜித்பவார் குற்றச்சாட்டு
- மக்களவைத் தேர்தலில் அமித்ஷா. ஜேபி நட்டா ஹெலிகாப்டர்களிலும் சோதனை – தேர்தல் ஆணையம்
- கோயில் பூசாரி தற்கொலை வழக்கு; ஓ.பி.எஸ். சகோதரர் ஓ.ராஜாவுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
- குஜராத்தில் ரயில் பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு – விரைந்து செயல்பட்ட மீட்பு படைகள்
- திருப்பூர் மாவட்டம் வேலப்பன்சாவடி சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை
- புதுச்சேரி கொலை மிரட்டல் வழக்கில் சரண் அடைந்த ரவுடிக்கு ஜாமீன் மறுப்பால் ரவுடி தப்பியோட்டம்
- தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
- ஈரோட்டில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை – 2 பேர் கைது
18:55 PM (IST) • 13 Nov 2024
Breaking News LIVE 13 Nov : மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் - அமைச்சர் மா.சு
அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியுள்ளது எனவும் போராட்டம் வாபஸ் குறித்து மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
18:51 PM (IST) • 13 Nov 2024
Breaking News LIVE 13 Nov : நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் விக்னேஷ்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.
Load More
Tags :
Tamilnadu Weather Breaking News Latest News Breaking News LIVE Breaking News Update Jharkhand Election Latest News Updateஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update





















