மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை.. சசிகலா சொத்துகள் முடக்கம்... முகக்கவசம் கட்டாயம்... இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்.
- தமிழகத்தில் 10க்கு மேற்பட்டோர் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் :அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவுறுத்தல்
- அதிமுக கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆர் நோக்கத்திற்கு எதிராக ஓபிஎஸ் செயல்படுகிறார் : உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
- 44வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு :15 பஸ்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் : பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
- தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பான அறிவிப்பு : இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
இந்தியா :
- ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை : மீறினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
- வீட்டூ உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை : வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ.187 குறைப்பு
- சர்ச்சைகுரிய கருத்துகளை கூறி நுபுர் சர்மா நாட்டை தீக்கிரையாக்கி விட்டார் : உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
- மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் 4 ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஷிண்டேவுக்கு ஆளுநர் கெடு
- திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு
உலகம் :
- இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சர்வதேச விமானங்கள் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- இலங்கையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உடனடி நடவடிக்கை தேவை : மருத்துவர் சங்கம் தகவல்
- தெற்கு ஈடானில் நிலநடுக்கம் 6.0 ஆக பதிவு
- அமெரிக்காவில் உச்சநீதிமன்றத்தில் முதல் கருப்பின பெண் நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன்
விளையாட்டு :
- இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப்பண்ட் மூன்று வடிவிலான போட்டிகளிலும் 100 சிக்ஸர்களை விளாசிய இளம் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவிப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion