மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: CUETக்கு எதிரான தீர்மானம்... இந்தியா - அமெரிக்க பேச்சு.. ஹைதராபாத் வெற்றி.. இன்னும் பல
மத்திய பல்கலைக்கழங்களுக்கு நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
தமிழ்நாடு:
- மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
- தென் தமிழகத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. மேலும் 2 நாட்களுக்கு டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு.
- தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
- மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று பட்டாபிஷேகம் திருவிழா நடைபெறுகிறது.
- தேனி நகராட்சித் தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பேசும் கமிஷேன் பேச்சு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
- வைகை அணையில் இருந்து சித்திரை திருவிழாவிற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
- சென்னை ஐஐடி மாணவி பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா:
- ஆந்திர அமைச்சரவையில் நடிகை ரோஜாவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலத்துறை ஒதுக்கீடு.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரோப்கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து. விபத்தில் சிக்கிய 27 பேர் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர்.
- கர்நாடகவில் இருந்து எஃகு ஏற்றுமதிக்கு இருக்கும் தடையை நீக்கும் வழக்கில் மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
- இந்தியாவில் ஐபோன் 13 உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியுள்ளது.
உலகம்:
- உக்ரைன் போர் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பைடன் ஆலோசனை.
- பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃபிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு முயன்று வருகின்றது.
- பிலிப்பைன்சில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குஜராத் லையன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion