Headlines Today Tamil: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் மரணம்... மனம்திறந்த அஷ்வின்..இன்றைய டாப் நியூஸ்..
Headlines Today in Tamil, 21 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்.
* மறைந்த சண்முகநாதனின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.
* சாட்டை துரைமுருகன் பேசிய முதல் வார்த்தையை படிக்கவே கூச்சமாக இருக்கிறது - நீதிபதி புகழேந்தி
* டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள் பாய்ந்தது.
* திருவாரூர் ஆழித் தேரோட்டம்: மார்ச் 15ல் நடைபெறுவதாக அமைச்சர் சேகர்பாபு தகவல்!
* ‛மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 50 மாணவர்கள் சேர்க்கை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
* வேலை வாங்கி தருவதாக கூறி 30 கோடி சுருட்டிய ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கைது
இந்தியா:
* லக்கிம்பூர் விவகாரத்தில் அஜய்மிஸ்ரா பதவி விலக கோரி டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ராகுல் காந்தி தலைமையில் கண்டப் பேரணி நடத்தினர்.
* எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே தேர்தல் சீர்த்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
* இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்.
* இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தனர்.
* புதுச்சேரியில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறினால் 100 ரூபாய் அபராதம்.
* ஹைதராபாத்தில் போலீசாருக்கு அழைப்பு விடுத்து கொலை நடந்ததாக பொய்யான தகவல் அளித்து காமெடி செய்த இளைஞரை, போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.
* கேரளா பா.ஜ.க. நிர்வாகி கொலை : எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது
* தொப்புள்கொடியுடன் பச்சிளங்குழந்தை... இரவு முழுவதும் பாதுகாத்த நாய்க்குட்டிகளும், தாய் நாயும்!
உலகம்:
* அமெரிக்காவில் முதல் ஓமைக்ரான் மரணம்: தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர் டெக்சாஸில் இறப்பு!
* `உலகின் முதல் டெஸ்லா பேபி’ - அமெரிக்காவில் டெஸ்லா காரில் பிறந்த குழந்தை!
* இலங்கையில் மேலே இழுத்து சென்ற காத்தாடி.. காயமடைந்த இளைஞர்..வெளியான அதிர்ச்சி வீடியோ!
* இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் 1500 மொழிகள் அழிய இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
* இன்று டிசம்பர் 21.. வடதுருவத்தில் குறுகிய பகலாகவும், தென் துருவத்தில் நீண்ட பகலாகவும் இருப்பது ஏன்?
விளையாட்டு:
* Vijay Hazare Trophy : சாய்கிஷோரின் சர்ப்ரைஸ்... ஷாரூக்கானின் ருத்ரதாண்டவம்.. கர்நாடகாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு!
* ‛எனக்கு யாருமே ஆதரவு தரவில்லை...’ -மனம் திறந்த அஷ்வின்!