காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
உலகம் முதல் உள்ளூர் வரையிலான இன்றைய நேரத்திற்கான முக்கியத் தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இது.
- ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் டோக்கன் முறையில் விநியோகிக்கப்படும் – கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு முடிவு.
- தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளது. இரண்டு நாட்களில் தடுப்பூசிகள் தீர்ந்துவிடும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
Chennai | Tamil Nadu Health Minister Ma Subramanian inaugurated a new hall with 504 additional beds at Covid care centre, set up at Chennai Trade Centre in Nandambakkam, taking the bed count to 864 with prior 360 beds here, for #COVID19 patients pic.twitter.com/C3gECNyz3t
— ANI (@ANI) May 31, 2021
- வரும் 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படாது – சுகாதாரத்துறை செயலாளர்.
- தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புஒரு வாரத்திற்கு பிறகு 28 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பு நேற்று 478 ஆக பதிவாகியது.
- தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் மே மாதம் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பு.
- மாதம் ஊதியமின்றி பணியாற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிதியுதவித்தொகை – தமிழக அரசு.
- இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரசுக்கு டெல்டா என்று பெயர் சூட்டியது உலக சுகாதார அமைப்பு.
Labelled using Greek alphabets, World Health Organisation (WHO) announces new labels for Covid variants of concern (VOC) & interest (VOC).
— ANI (@ANI) May 31, 2021
Covid variant first found in India will be referred to as 'Delta' while earlier found variant in the country will be known as 'Kappa' pic.twitter.com/VIEVWBGryC
- மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அந்தோபத்யாய் முதல்-அமைச்சரின் தலைமை ஆலோசகராக நியமனம் –மம்தா பானர்ஜி அறிவிப்பு
- பி.எப். சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்க அனுமதி – தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம் அறிவிப்பு
How to withdraw your PF Amount.#EPFO #SocialSecurity #HumHainNa@santoshgangwar @PIB_India @MIB_India @mygovindia @_DigitalIndia @transformIndia pic.twitter.com/Jyalo5ab0V
— EPFO (@socialepfo) May 31, 2021
சீனாவில் சரியும் மக்கள் தொகை - இனி தம்பதிகள் 3 குழந்தைகளை பெற்று கொள்ளலாம் என சீன அரசு புதிய கொள்கை முடிவு!#china #childrenpolicyhttps://t.co/R2Lv5yXzVc
— ABP Nadu (@abpnadu) May 31, 2021
- சீனாவில் ஒரு குடும்பத்தினர் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதித்துள்ளது.