மேலும் அறிய

காலை முக்கியச் செய்திகள்: கருணாநிதி நினைவு... வழிபட தடை... பள்ளி திறப்பு... மீண்டும் தோனி... இன்னும் பல!

கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்

* முன்னாள் முதலமைச்சரின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கொரோனாவால் வீட்டிலேயே அஞ்சலி செலுத்த தொண்டர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்.

* தமிழ்நாட்டில் நேற்று 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,908 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 30 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

* தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் மற்றும் இறைச்சி சந்தைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் திறந்தவெளியில் தனித்தனிக் கடைகளாக பிரிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

* செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகளில் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க அரசு உத்தேசம். மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து - சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாரர் தகவல். வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகலை வரும் 19-ஆம் தேதிக்கு தாக்கல் செய்ய  வேண்டும்  என்று சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

* மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

* நீதிபதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வாட்ஸ் அப், பேஸ்புக் மூலம் மிரட்டல். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை.

* டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

* ஒலிம்பிக்கில் வெண்கலத்திற்கான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வென்றது. இதனால், இந்தியாவுக்கு வென்கலப் பதக்கம் கிடைக்கும் பறிபோனது. கடைசி வரை போராடிய இந்திய அணி, நான்காவது இடத்தில் நிறைவு செய்தது. 

* ராஜீவ் காந்தி பெயரில் வழங்கப்பட்ட கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

*  இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் புதிய உலக சாதனையை படைத்தார்.  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 619 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளி 621 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கிலிருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Embed widget